5 பெண்களை ஏமாற்றி திருமணம் செய்த கல்யாண மன்னன்..! 4 வது மனைவி புகாரால் போலீசாரிடம் சிக்கிய மாப்பிள்ளை

Published : Aug 01, 2022, 10:14 AM IST
5 பெண்களை ஏமாற்றி திருமணம் செய்த கல்யாண மன்னன்..! 4 வது மனைவி புகாரால் போலீசாரிடம் சிக்கிய மாப்பிள்ளை

சுருக்கம்

புதுச்சேரியில் 5 பெண்களை ஏமாற்றி திருமணம் செய்து மோசடி செய்தவர் மீது 4ஆவது மனைவி போலீசில் புகார் கூறி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  

5 பெண்களை ஏமாற்றி திருமணம் 

திருமணங்கள் ஆயிரங்காலத்து பயிர்,  சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகிறது என பழமொழி உண்டு ஆனால் இன்றோ ஒரு திருமணம் செய்ய 90ஸ் கிட்ஸ் அல்லோலப்பட்டு வரும் நிலையில், ஒரே நபர் 5 பெண்களை திருமணம் செய்து ஏமாற்றி நிகழ்வு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  கடலூர் மாவட்டம் மேலூர் குப்பத்தை சேர்ந்தவர் காயத்ரி. இவர் புதுச்சேரி மாநிலத்தை சேர்ந்த சீனு என்பவரை கடந்த 2020 ஆம் ஆண்டு  திருமணம் செய்துள்ளார். இந்த நிலையில் தனது கணவர் வரதட்சனை கேட்டு துன்புறுத்துவதாக புதுச்சேரி அரியாங்குப்பம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரில்,  அரியாங்குப்பத்தை சேர்ந்த சீனு என்கிற தெய்வநாயகம் (42) என்பவரை கடந்த 2020ஆம் ஆண்டு ஜூன் மாதம் இரு வீட்டாரின் சம்மதத்துடன்  திருமணம் நடைபெற்றதாக தெரிவித்துள்ளார். 

பிரிந்து சென்ற காதல் மனைவி!ஏக்கத்தில்மச்சினிச்சிக்கு பிராக்கெட் போட அக்கா புருஷன் செய்த வேலையை நீங்களே பாருங்க

வரதட்சனை கேட்டு கொடுமை

 கொரோனா ஊரடங்கு என்பதால் மண்டபத்தில் வரவேற்பு நிகழ்ச்சி வைக்க முடியவில்லையென கூறியுள்ளார். புதுச்சரியை சேர்ந்த சீனுவை திருமணம் செய்வது கொள்வதற்காக வரதட்சணையாக 6 பவுன் தங்க நகை, இரண்டு சக்கர வண்டி, பீரோ, கட்டில் வழங்கப்பட்டதாக தெரிவித்துள்ளார். மூன்று மாதங்கள் இருவரும் ஒன்றாக சந்தோஷமாக வாழ்ந்ததாக தெரிவித்துள்ளார். மூன்று மாதங்கள் கடந்த நிலையில் காயத்ரியிடம் தினந்தோறும் தகராறு செய்து அடித்து துன்புறுத்தியுள்ளதாக தெரிவித்துள்ளார். அதிக பணம், நகை வேண்டுமென கொடுமைப்படுத்தியுள்ளார். இது குறித்து காயத்ரி தன் தாயிடம் தகவல் தெரிவித்துள்ளார்.  மூன்று மாதம்  கர்ப்பிணியாக இருந்த காயத்ரியை கடலூரில் உள்ள  தாய் வீட்டிற்கு அழைத்து சென்றுள்ளார். இதன் பிறகு சீனு,  காயத்ரியை தொடர்பு கொண்டு பேசாமல் இருந்துள்ளார்.  கணவர் பேசாமல் இருந்துள்ளதால் சந்தேகப்பட்டு அவர் தொடர்பாக  விசாரிக்க தொடங்கியுள்ளார். அப்போது  ஏற்கனவே சீனுவிற்கு மூன்று மனைவிகள் உள்ளது தெரியவந்துள்ளது. அதில் முதல் மனைவி அனிதா என்கிற இந்திர குமாரி, இரண்டாவது மனைவி  தேவி அரியாங்குப்பத்திலும்,   மூன்றாவது மனைவி கனகவல்லி என்பவரையும் திருமணம் செய்துள்ளது தெரியவந்தது. தன்னை நான்காவதாக திருமணம் செய்ததை அறிந்து அதிர்ச்சி அடைந்துள்ளார். இந்தநிலையில் காயத்திரி  பிரசவத்திற்காக புதுச்சேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பொழுது புதுச்சேரி வம்பாகீரை பாளையம் பகுதியைச் சேர்ந்த பிரேமா என்கிற பிரபாவதி என்பவரையும் சீனு  ஐந்தாவதாக திருமணம் செய்துள்ளது தெரியவந்தது.

தீவிரவாத அமைப்புடன் தொடர்பு… பொறியியல் கல்லூரி மாணவர் கைது!!

கொலை செய்வதாக மிரட்டல்

திருமண மோசடி புகார் தொடர்பாக சீனுவிடம் கேட்டதற்கு அடியாட்களை வைத்து கொலை செய்து விடுவதாக மிரட்டுவதாக கூறியுள்ளார். இந்த நிலையில் தனக்கு ஏற்பட்டது போல் மற்ற பெண்களுக்கு பாதிப்பு ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக காவல்நிலையத்தில் புகார் செய்திருப்பதாக காயத்ரி தெரிவித்துள்ளார்.  திருமண மோசடி புகார் தொடர்பாக சீனுவை அழைத்து விசாரிக்க புதுச்சேரி போலீசார் திட்டமிட்டுள்ளனர்.

இதையும் படியுங்கள்

படம் பாக்குறியா தம்பி.. 15 வயது சிறுவனுடன் ஓட்டம்பிடித்த 4 குழந்தைகளின் தாய் - அடேங்கப்பா.!

 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

பள்ளி, கல்லூரி மாணவிகளை ஒரே நேரத்தில் கரெக்ட் செய்த இளைஞர்! கை குழந்தைகளுடன் 2 பேரும் கதறல்! இறுதியில் நடந்த ட்விஸ்ட்!
இதற்காக தான் கார் டிரைவர் ஹரீஷை கூலிப்படை ஏவி கொன்றேன்! மஞ்சுளாவின் சினிமாவை மிஞ்சிய பரபரப்பு வாக்குமூலம்!