சென்ட்ரல் ரயில் நிலையத்தில் ஒரு வயது குழந்தை கடத்தல்.! அதிரடியாக இறங்கிய போலீஸ்-குற்றவாளிகள் சிக்கியது எப்படி?

By Ajmal Khan  |  First Published Oct 16, 2023, 9:25 AM IST

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் நள்ளிரவு நேரத்தில் பிளாட்பாரத்தில் தூங்கிய தம்பதியின் ஒரு வயது குழந்தை கடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், போலீசாரின் துரித நடவடிக்கையால் குழந்தை மீட்கப்பட்டு பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.  
 


ரயில் நிலையத்தில் குழந்தை கடத்தல்

ஒடிசா மாநிலம் காந்தம்மால் மாவட்டம் பகுதியைச் சேர்ந்த நந்தினி கண்காகர் - லங்கேஸ்வர் ஆகியோர் தங்களது ஒரு வயது ஆண் குழந்தையுடன் நேற்றிரவு ஒரிசாவில் இருந்து சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு வந்துள்ளனர்.  நள்ளிரவு நேரம் என்பதால் சென்ட்ரல் ரயில் நிலையத்தில் அங்கேயே அந்த தம்பதியினர் தூங்கி உள்ளனர்.  இந்த நிலையில் திடீரென ஒரு மணி அளவில் எழுந்து பார்க்க ஆண் குழந்தை காணாமல் போனது தெரியவந்தது.  ரயில் நிலையம் முழுவதும் தேடி பார்த்து குழந்தை கிடைக்காமல் போனதால் சென்ட்ரல் ரயில் நிலைய போலீசாரிடம் புகார் அளித்தனர். 

Tap to resize

Latest Videos

அதிரடியாக குழந்தையை மீட்ட போலீஸ்

போலீசார் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து பார்த்த போது மர்ம நபர் ஒருவர் குழந்தையை தூக்கிக்கொண்டு ஆட்டோவில் ஏறுவது தெரியவந்தது.  ஆட்டோ எண்ணை வைத்து ஆட்டோ ஓட்டுநரை பிடித்து விசாரணை செய்த போது குன்றத்தூர்  அடுத்த பகுதியில் அந்த நபரை இறக்கி விட்டதாக கூறியுள்ளார். இதனை அடுத்து தனிப்படை அமைக்கப்பட்டு சென்ட்ரல் ரயில் போலீசார் குழந்தையை மீட்க தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

இதனையடுத்து ஆட்டோ ஓட்டுநரை அழைத்துக் கொண்டு குன்றத்தூர் சென்றனர். அப்போது குன்றத்தூர் ஏரிக்கரை அருகில் விட்டில் குழந்தையோடு இருந்த இரண்டு பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து குழந்தையை மீட்ட போலீசார் பெற்றோரிடம் குழந்தையை ஒப்படைத்தனர். 

இதையும் படியுங்கள்

கள்ளக்காதலை கைவிட மறுத்த கணவர்.. ஆத்திரத்தில் தாலி கட்டிய மனைவி செய்த காரியம்..!

 

click me!