2 குழந்தைகளை அடித்தே கொன்ற மனநலம் பாதிக்கப்பட்ட தாய்.. குடும்ப தகராறில் விபரீதம்

By Raghupati R  |  First Published Aug 24, 2022, 2:53 PM IST

குடும்ப தகராறில் 2 குழந்தைகளை அடித்து கொன்று, தானும் விஷம் குடித்து தற்கொலை முயற்சி மேற்கொண்ட தாயினால் பரபரப்பு ஏற்பட்டது.


திருப்பூர், வெள்ளகோவில் அருகே உள்ள அத்தாம்பாளையத்தை சேர்ந்தவர் கனகசம்பத் (45), இவருக்கு ரேவதி(42) திருமணம் ஆகிய நிலையில் ஹட்சிதா (13), என்ற மகளும்  கலைவேந்தன் (8)  என்ற மகனும்  உள்ளனர். இவர்கள் இருவரும் வெள்ளகோவிலில் உள்ள தனியார் பள்ளியில் படித்து வருகின்றனர். இந்நிலையில் கணவன் மனைவி ஆகிய இருவரிடையே மதியம் முதல் சண்டையிட்டுள்ளனர். 

Tap to resize

Latest Videos

மேலும் செய்திகளுக்கு..ஆண் நண்பர்களுடன் உல்லாசம்.. போதையில் தள்ளாடிய தோழிகள் - காதலிக்கு முன்னாள் காதலன் கொடுத்த அதிர்ச்சி

பின்னர் கனகசம்பத் வெளியே சென்றுள்ள நிலையில் மாலை பள்ளி முடிந்து வந்த குழந்தைகளிடையே பேபி சண்டையிட்டதாக  கூறப்படுகின்றது. பின்னர் இரும்பு ராடில் அடித்து கொலைவெறி தாக்குதலில் ஈடுபட்டுள்ளார். இதில் சம்பவ இடத்தில் இரு குழந்தைகள்  பலியாகினர் என்று கூறப்படுகிறது. பின்னர் தாயார் பேபி செடிகளுக்கு அடிக்கும் பூச்சிக்கொல்லி மருந்தை சாப்பிட்டு தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார். இரு குழந்தைகளை கொலை செய்து தாயும் தற்கொலை முயற்சி செய்தது வெள்ளகோவில் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

மேலும் செய்திகளுக்கு..கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதி மரண வழக்கு.. அடுத்தடுத்து அதிரடி திருப்பங்கள் !

இறந்த குழந்தைகளை காங்கேயம் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்கு வைக்கப்பட்டுள்ள நிலையில், அடித்துக்கொன்ற தாய் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டவரை மீட்டு கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். காவல்துறையினர் இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விசாரணையில் தாய் பேபி மனநல சிகிச்சை பெற்றுவந்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகளுக்கு..குடும்ப அட்டைதாரர்களுக்கு அதிர்ச்சி செய்தி..! ரேஷனில் இனி இலவச பொருட்கள் கிடையாது

click me!