இப்படியும் கொடூரமாக சித்ரவதை செய்ய முடியுமா ? பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை !!

Published : May 16, 2019, 09:33 AM IST
இப்படியும் கொடூரமாக சித்ரவதை செய்ய முடியுமா ? பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை !!

சுருக்கம்

மத்திய பிரதேசத்தில் பெண்ணின்  கருப்பையில்  பைக்கின் உதிரி பாகம் இருந்ததால்  அந்தப் பெண்ணை கொடுமைப்படுதியதாக அவரது கணவரை போலீசார் கைது செய்தனர்.

மத்தியப்பிரதேச மாநிலத்தில் உள்ள தார் என்ற பகுதியைச் சேர்ந்த பெண்ணுக்கு திருமணமாகி 6 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் அந்தப் பெண்ணுக்கு கடந்த சில மாதங்களாக கடும் வயிற்றுவலி இருந்துள்ளது.

அந்தப் பெண், மருத்துவமனையில் சோதனை செய்தபோது அவரின் கருப்பையில் பைக் கைப்பிடியின் உடைந்த 6 இஞ்ச் பகுதி இருப்பதை மருத்துவர்கள் கண்டுபிடித்தனர்.

அதனை தொடர்ந்து அந்தப் பெண்ணிடம் விசாரணை நடத்தியதில், அவருக்கும் அவரது கணவருக்கும் தொடர்ந்து கருத்து வேறுபாடு இருந்ததால் அவர்களுக்கு இடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டதையும், அந்த பெண்ணை அவருடைய கணவர் பல நேரங்களில் அடித்து சித்ரவதை செய்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், ஒருநாள் கணவன்-மனைவிக்கு இடையே நடந்த சண்டையில் அந்தப் பெண்ணை கடுமையாக தாக்கிய கணவர், ஆத்திரத்தின் உச்சத்தில் பெண்ணின் பிறப்புறுப்பில் பைக்கின் கைப்பிடியை சொருகியுள்ளார்.

இதனை யாரிடமும் அந்தப் பெண் தெரிவிக்காமல் இருந்துள்ளார். தற்போது மருத்துவ சோதனையில் அந்த பெண்ணிற்கு நடந்த கொடுமை வெளிவர அந்தப் பெண் கொடுத்த புகாரின் பேரில் அவரது கொடூர கணவரை கைது செய்து சந்தன் நகர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

PREV
click me!

Recommended Stories

Salem Crime: இரண்டு குழந்தைகளை பெற்றும் அடங்காத 23 வயது லலிதா.. அலறிய சேலம்.. நடந்தது என்ன?
Chennai Crime: ரயில் நிலையத்தில் சூட்கேஸில் தலையில்லாத சடலம்! கணவனை துண்டு துண்டாக வெட்டி கொன்றது ஏன்? சிக்கிய மனைவி பகீர்