கணவன் மீது கடும் கோபம் ! போலீஸ் மனைவி செய்த வேலையப் பாருங்க !!

Published : Jun 20, 2019, 08:07 AM IST
கணவன் மீது கடும் கோபம் !  போலீஸ் மனைவி செய்த வேலையப் பாருங்க !!

சுருக்கம்

கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்திருந்த தனது கணவரின் ஜுஸ் பிழியும் எந்திரத்தை 2 போலீஸ் உதவியுடன் பெண் போலீஸ் மனைவி எடுத்துச் சென்ற  சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.   

கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் பெரியார் நகரில் வசிக்கும் சற்குணம் என்பவர் அப்பகுதியில் கரும்பு ஜூஸ் கடை நடத்தி வருகிறார். இவரது மனைவி தமிழ் சுதா, நெய்வேலியில் உள்ள டவுன்ஷிப் பகுதி போலீஸ் நிலையத்தில் காவலராக பணிபுரிகிறார். 

இவர்கள் இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக கடந்த ஒன்றரை ஆண்டு காலமாக, பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.
.
இந்நிலையில் நேற்று முன்தினம்  திடீரென சற்குணம் நடத்தும் ஜூஸ் கடைக்கு அவரது மனைவி தமிழ் சுதா வந்துள்ளார். அவருடன் பணிபுரியும் 2 ஆண் காவலர்களும் அங்கே வந்துள்ளனர். 

அவர்கள் ஒன்று சேர்ந்து, கரும்பு ஜூஸ் இயந்திரத்தை எடுத்துச் சென்றுவிட்டனர். இதில், சற்குணம் கடும் அதிர்ச்சி அடைந்திருக்கிறார். ஜூஸ் இயந்திரம் தான் வாங்கிக் கொடுத்தது என்றும் தமிழ் சுதா கூறியிருக்கிறார். 

இதனால் செய்வதறியாது திகைத்த சற்குணம், விருத்தாச்சலம் சார் ஆட்சியர் அலுவலகம் முன்பு மண்ணெண்ணெய் உடலில் ஊற்றி, தீக்குளிக்க முயன்றார். இதனை பார்த்ததும் அங்கிருந்த பொதுமக்கள் அரசு தலையில் தண்ணீர் ஊற்றி, அவரை காப்பாற்றினர். இச்சம்பவம் அங்கு திடீர் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

இதுபற்றி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மனைவி மீது புகார் அளித்து, சார் ஆட்சியர் அலுவலகம் முன்பு தீக்குளித்த இளைஞரால் பரபரப்பு ஏற்பட்டது.

PREV
click me!

Recommended Stories

ரூமில் கள்ளக்காதலனுடன் மனைவி.. பார்க்க கூடாததை பார்த்த கணவர்.. குழந்தை வாக்குமூலத்தில் வெளிவந்த பகீர் உண்மை!
இன்ஸ்பெக்டர் வீட்டில் குளித்த கல்லூரி மாணவி.. வளைச்சு வளைச்சு வீடியோ எடுத்த போலீஸ்காரர்.. இறுதியில் நடந்த ட்விஸ்ட்