அரெஸ்ட் பண்ண வந்த போலிசார்...பிளேடால் உடம்பை கிழித்து கொள்ளும் கஞ்சா வியாபாரி!!

Published : Jun 19, 2019, 05:29 PM IST
அரெஸ்ட் பண்ண  வந்த போலிசார்...பிளேடால் உடம்பை கிழித்து கொள்ளும் கஞ்சா வியாபாரி!!

சுருக்கம்

மந்தாரகுப்பத்தில் கஞ்சா மணிகண்டனை கைது செய்ய போலிசார் சென்ற போது, திடிரென அவர் கையில் வைத்திருந்த பிளேட் மூலம் கை மற்றும் வயிற்று உடம்பில் தன்னை தானாக கிழித்து கொண்டார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. 

கடலூர் மாவட்டம் நெய்வேலி அருகே அதிகளவு கஞ்சா விற்பனை நடைபெற்று வருகிறது. இதனை போலிசார் தடுத்து வரும் நிலையில் கஞ்சா விற்பனை செய்யும் இளைஞர் ஒருவர் நான் பெங்களூர் மணி என்ற மணிகண்டன்  பேசுகிறேன். நான் தற்போது நெய்வேலியில் கஞ்சா விற்று  வருகிறேன். இதை தடுக்க நினைக்கும் சுரேஷை கொலை செய்யப்போறேன். போலிசார் என்னை கைது செய்யமுடியுமா? என தெனாவட்டாக கேள்வி கேட்டதை, கஞ்சா விற்றவர் மற்றும் கஞ்சா பயன்படுத்துபவர் என அனைவரும் சேர்ந்து எடுத்த  வீடியோ  சமூக வலைத்தளங்களில் வெளியிட்டனர்.

இந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வேகமாக வைரலாகிவந்த நிலையில் இவ்வீடியோவில் இருப்பவர் பெங்களூரை சேர்ந்த கண்ணன் மகன் மணி என்கிற மணிகண்டன் என்றும், இவர் நெய்வேலி மந்தாரகுப்பம் ஒம் சக்தி நகரை சேர்ந்த பெண்னை திருமணம் செய்து கொண்டு இங்கே வந்துள்ளார். இவர் பெங்களூரிலிருந்து  நெய்வேலி வரும் போது, கஞ்சா பொட்டலங்களை எடுத்து வந்து இங்கே விற்று வந்துள்ளார். கடந்த ஏப்ரல் மாதம்  மணியின் நண்பர் சுரேஷ்க்கும்   சண்டை வந்ததால் இதன் காரணமாக, தனது சக நண்பர்களுடன்  போதையில் காவல்துறைக்கு சவால் விடும் வீடியோவை பதிவு செய்துள்ளனர்.

இந்நிலையில்,  இன்று  நெய்வேலி மந்தராகுப்பம் போலிசார் மந்தாரகுப்பத் சக்தி நகரில் இருந்து மணிகண்டனை கைது செய்ய போலிசார் சென்ற போது, திடிரென அவர் கையில் வைத்திருந்த பிளேட் மூலம் கை மற்றும் வயிற்று உடம்பில் தன்னை தானாக கிழித்து கொண்டார். இதனால் போலீசார் அவனை நெருங்காமல் அதிர்ச்சியில் உறைந்தனர். பின்னர் உறவினர்கள் மற்றும் அவரது மனைவியை வைத்து கைது செய்தனர். இந்த வீடியோவும் தற்போது வேகமாக வைரலாகி வருகிறது.  

PREV
click me!

Recommended Stories

வழக்கறிஞர் சொல்லி எஸ்.ஐ. மடக்கி கதறவிட்ட அலமேலு.. விசாரணையில் வெளியான அதிர்ச்சி
போதையில் இளைஞர்கள் அட்டூழியம்.. பள்ளி மாணவிகள் பின்னே சென்று அட்ராசிட்டி.. இறுதியில் நடந்த ட்விஸ்ட்