காதலனை நம்பி சென்ற 15 வயது சிறுமி.. நடுக்காட்டில் நடந்த கொடூர சம்பவம் - பரபரப்பு பின்னணி

Published : Oct 26, 2022, 07:18 PM IST
காதலனை நம்பி சென்ற 15 வயது சிறுமி.. நடுக்காட்டில் நடந்த கொடூர சம்பவம் - பரபரப்பு பின்னணி

சுருக்கம்

காதலனை நம்பி சென்ற 15 வயது சிறுமிக்கு நடந்த கொடூர சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அதிர்ச்சி சம்பவம்:

திருவள்ளூர் அருகே உள்ள நெல்வாய் கிராமத்தை சேர்ந்தவர் 37 வயதான திலகா. இவருக்கு 15 வயதில் உஷா என்ற மகள் உள்ளார். கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவரை பிரிந்து தனது மகளுடன் தனியாக வாழ்ந்து வருகிறார். சிறுமி உஷா பெரியபாளையத்தில் உள்ள அரசு பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வந்துள்ளார்.

இதையும் படிங்க..கோவை குண்டு வெடிப்பு திட்டமிட்டதுதான்.! முதல்வர் கண்டனம் சொல்லவே இல்லை - பற்ற வைக்கும் எச்.ராஜா

பள்ளி மாணவி:

அதே பகுதியில் மூக்கரம்பாக்கம் கிராமத்தை சேர்ந்த பிரவீன் என்ற 19 வயது இளைஞருடன் சிறுமிக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட சிறுமியை காதலிப்பதாகவும், திருமணம் செய்து கொள்வதாகவும் ஆசை வார்த்தை கூறி பிரவீன் அடிக்கடி சிறுமியுடன் நெருக்கமாக இருந்துள்ளார். அதுமட்டுமில்லாமல், சிறுமியை அழைத்து சென்று மது ஊற்றிக் கொடுத்து தனது சக நண்பன் ஒருவனுடன் சேர்ந்து பாலியல் சீண்டல்களில் ஈடுபட்டதாகவும் கூறப்படுகிறது.

பாலியல் சீண்டல்:

ஒருகட்டத்தில் சிறுமி உஷா தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு ப்ரவீனை வற்புறுத்தியுள்ளார். அச்சிறுமியை தனியாக அழைத்து சென்ற பிரவீன், தனது நண்பன் ரஞ்சித்துடன் சேர்ந்து மாணவிக்கு மது ஊற்றி கொடுத்து தலையில் கல்லால் தாக்கியும், கழுத்தை நெறித்தும் கொடூரமாக கொலை செய்துள்ளனர். பின்னர் சிறுமியின் உடலை கொள்ளனூர் ஏரியில் வீசியுள்ளனர்.

இதையும் படிங்க..கோடநாடு எஸ்டேட் கொலை, கொள்ளை வழக்கில் அதிரடியாக களத்தில் குதித்த சிபிசிஐடி

போலீசார் விசாரணை:

சிறுமியின் பிணம் கண்டெடுக்கப்பட்ட நிலையில் விசாரணை மேற்கொண்ட போலீசார் சிறுமிக்கும், ப்ரவீனுக்கும் பழக்கம் இருப்பது தெரிந்து கொண்டனர். பிறகு சம்பந்தப்பட்டவர்களை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதையும் படிங்க..ரிஷி சுனக் மட்டும் கிடையாது மக்களே.! உலகை கலக்கும் 15 இந்தியர்கள் யார் யார் தெரியுமா ?

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

தனியாக இருந்த மாணவியை மிரட்டி ஆபாச வீடியோ பதிவு.. மக்கள் போராட்டத்தால் ம.பி.யில் பதற்றம்!
என் பொண்ண வாரி கொடுத்துட்டு இருக்கேன்! உனக்கு உல்லா*சம் கேக்குதா! டார்ச்சர் கொடுத்த திமுக வழக்கறிஞர் கொ*லை!