சரக்கு அடிக்க பணம் கேட்டு ஓயாமல் டார்ச்சர்.. கடுப்பான தந்தை.. பெற்ற மகனையே துடிதுடிக்க கொன்ற பயங்கரம்..!

Published : Oct 26, 2022, 03:36 PM ISTUpdated : Oct 26, 2022, 03:39 PM IST
சரக்கு அடிக்க பணம் கேட்டு ஓயாமல் டார்ச்சர்.. கடுப்பான தந்தை.. பெற்ற மகனையே துடிதுடிக்க கொன்ற பயங்கரம்..!

சுருக்கம்

மதுரை மாவட்டம் வில்லாபுரம் ஹவுசிங்போர்டு பகுதியைச் சேர்ந்தவர் செல்வராஜ்(63). இரும்பு வியாபாரி. இவரது மகன் கங்காதரன்(34). தீபாவளி நாள் என்பதால் கங்காதரன் தொடர்ச்சியாக டாஸ்மாக் கடைக்குப் போய் மது அருந்துவதும், வீட்டில் வந்து தன் தந்தை, மனைவி, குழந்தைகளிடம் தகராறு செய்து வந்துள்ளார்.

மது குடித்துவிட்டு தகராறு செய்த மகனை தந்தையே கொலை செய்த சம்பவம் மதுரையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

மதுரை மாவட்டம் வில்லாபுரம் ஹவுசிங்போர்டு பகுதியைச் சேர்ந்தவர் செல்வராஜ்(63). இரும்பு வியாபாரி. இவரது மகன் கங்காதரன்(34). தீபாவளி நாள் என்பதால் கங்காதரன் தொடர்ச்சியாக டாஸ்மாக் கடைக்குப் போய் மது அருந்துவதும், வீட்டில் வந்து தன் தந்தை, மனைவி, குழந்தைகளிடம் தகராறு செய்து வந்துள்ளார். மேலும்,  ஒருகட்டத்தில் கூடுதலாகக் குடிக்க பணம்கேட்டு தொந்தரவும் செய்தார். பணம் தராததால் தந்தை, மனைவி ஆகியோரை அசிங்கமாக திட்டியிருக்கிறார். 

இதையும் படிங்க;- ஆசைவார்த்தை கூறி ஆசைத்தீர ரூம் போட்டு உல்லாசம்.. வேலை முடிந்ததும் வேலையை காட்டிய இளைஞர்.. கதறும் இளம்பெண்.!

இதனால், கடும் ஆத்திரமடைந்த தந்தை செல்வராஜ் வீட்டில் இருந்த கத்தியை எடுத்து, தன் மகன் கங்காதரன் நெஞ்சில் குத்தினார். இதில், ரத்த வெள்ளத்தில் சரிந்த மகனை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். 

இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் மகனை கொலை செய்த தந்தை செல்வராஜை கைது செய்து சிறையில் அடைத்தனர். தீபாவளி தினத்தில் குடியால் பெற்ற மகனையே கொலை செய்துவிட்டு தந்தை சிறைக்கு சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க;- பெற்றோர் எதிர்ப்பை மீறி காதல் திருமணம்.. தலைதீபாவளி கொண்டாட சென்ற புதுமாப்பிள்ளை கூலிப்படையால் கொலை?

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

தனியாக இருந்த மாணவியை மிரட்டி ஆபாச வீடியோ பதிவு.. மக்கள் போராட்டத்தால் ம.பி.யில் பதற்றம்!
என் பொண்ண வாரி கொடுத்துட்டு இருக்கேன்! உனக்கு உல்லா*சம் கேக்குதா! டார்ச்சர் கொடுத்த திமுக வழக்கறிஞர் கொ*லை!