கோவை கார் வெடி விபத்து..! உயிரிழந்த முபினின் உறவினரிடம் போலீஸ் விசாரணை..! லேப்டாப் பறிமுதல்

Published : Oct 26, 2022, 04:16 PM ISTUpdated : Oct 26, 2022, 04:18 PM IST
கோவை கார் வெடி விபத்து..! உயிரிழந்த முபினின் உறவினரிடம் போலீஸ் விசாரணை..! லேப்டாப் பறிமுதல்

சுருக்கம்

கோவை கார் வெடி விபத்தில் உயிர் இழந்த முபினின் உறவினராக அப்சர்கானிடம் போலீசார் விசாரணைக்கு அழைத்து சென்றுள்ளனர். அவரிடம் இருந்த லேப்டாப்பையும் போலீசார் சோதனைக்காக எடுத்து சென்றுள்ளனர்.

கோவை கார் வெடி விபத்து

கோவை மாவட்டம் உக்கடம் பகுதியில் உள்ள கோட்டை ஈஸ்வரன் கோயில் பகுதியில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு காரில் இருந்து சிலிண்டர் வெடித்து விபத்துக்குள்ளனது. இந்த விபத்தில் காரில் பயணம் செய்த ஒருவர் உடல் கருகி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். விபத்து நடைபெற்ற இடத்தில் ஆணி, பால்ராஸ் குண்டுகள் போன்றவை கண்டெடுக்கப்பட்டது. இதனையடுத்து 6 தனிப்படைகள் அமைக்கப்பட்ட விசாரணையில் இறந்தது ஜமேசா முபின் என தெரியவந்துள்ளது. அவரது வீட்டில் நடைபெற்ற சோதனையில் வெடிபொருட்களுக்கு தேவையான பொட்டாட்சியம் நைட்ரேட், அலுமினியம், சல்பர் போன்ற வெடி பொருட்கள் கைப்பற்றப்பட்டது. இதனையடுத்து இந்த வழக்கு தொடர்பாக போலீசார் 5 பேரை உபா சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர். இதன் தொடர்ச்சியாக அந்த பகுதியில் சந்தேகத்திற்குரிய வகையில் செயல்பட்ட 20 பேரிடமும் விசாரணை நடைபெற்றது. 

கோவை குண்டு வெடிப்பு திட்டமிட்டதுதான்.! முதல்வர் கண்டனம் சொல்லவே இல்லை - பற்ற வைக்கும் எச்.ராஜா

சோதனை நடத்தி போலீஸ்

இந்தநிலையில் சிலிண்டர் வெடிப்பில் பலியான ஜெமிசா முபின் பெரியம்மா மகன்  அப்சர்கான் என்பவரது வீட்டில் சிறப்பு புலனாய்வு போலீசார் சோதனை செய்தனர். இந்த சோதனையில் கணினி மற்றும் அவர் பயன்படுத்திய கார் அனைத்தும் சோதனை செய்யப்பட்டது.  பின்னர் அப்சர் கானை போலீசார் அழைத்துச் சென்றனர் இதுகுறித்து பெரியப்பா பஷீர் கூறும் போது இரண்டு நாட்களுக்கு முன்பு விசாரணைக்கு அழைத்துச் சென்றனர் இன்று காலையும் அதே போல வந்து வீட்டில் சோதனை செய்து கணினி எடுத்துக்கொண்டு அவரையும் அழைத்துச் சென்றதாக தெரிவித்தார்.

இதையும் படியுங்கள்

வெடி பொருள் என்று தெரிந்தே உதவி செய்துள்ளனர்..! 5 பேர் மீது உபா சட்டம் பாய்ந்தது- காவல் ஆணையர் பரபரப்பு தகவல்

PREV
click me!

Recommended Stories

தனியாக இருந்த மாணவியை மிரட்டி ஆபாச வீடியோ பதிவு.. மக்கள் போராட்டத்தால் ம.பி.யில் பதற்றம்!
என் பொண்ண வாரி கொடுத்துட்டு இருக்கேன்! உனக்கு உல்லா*சம் கேக்குதா! டார்ச்சர் கொடுத்த திமுக வழக்கறிஞர் கொ*லை!