100 முறைக்கும் மேல் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட பெண்.. இன்ஸ்டா காதல் விபரீதம் - அதிர்ச்சி சம்பவம்

Published : Aug 01, 2022, 06:41 PM IST
100 முறைக்கும் மேல் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட பெண்.. இன்ஸ்டா காதல் விபரீதம் - அதிர்ச்சி சம்பவம்

சுருக்கம்

மேற்கு வங்காளத்தை சேர்ந்த பெண் ஒருவர் சமூக வலைதளத்தில் அறிமுகமான நபரை நம்பி ஏமாந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

சிறுமி ஒருவர் நான்கு மாதங்களில் பல்வேறு மாநிலங்களில் மூன்று முறை விற்பனை செய்யபட்டு, பலாரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார், மேலும் அவரை விட 30 வயது மூத்த ஒருவரை வலுக்கட்டாயமாக திருமணம் செய்துவைக்கபட்டார். இது தொடர்பான வழக்கில் போலீஸ் அதிகாரிகள் பீகார், உத்தரபிரதேசம் மற்றும் உத்தரகாண்ட் ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த ஒரு பெண் மற்றும் பாதிக்கப்பட்ட பெண்ணின் 'காதலன்' ராகுல் உட்பட ஆறு குற்றவாளிகளை கைது செய்தனர். 

இந்த வழக்கில் நான்கு பேருக்கு 20 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் மேலும் இருவருக்கு 10 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்து உள்ளது.  ஏழு ஆண்டுகளுக்கு முன்பு 15 வயதான அந்த பெண் சமூக ஊடகம் மூலம் ஒரு வாலிபருடன் அறிமுகமானார். வீட்டில் பள்ளிக்கு செல்வதாக கூறி விட்டு அந்த நபரை சந்திக்க சென்றுள்ளார். ஜனவரி 7, 2015 அன்று, அவர் கொல்கத்தாவில் உள்ள சயின்ஸ் சிட்டி அருகே அந்த நபரை சந்தித்தார். 

மேலும் செய்திகளுக்கு..ஆகஸ்ட் 3 பள்ளி & கல்லூரிகளுக்கு விடுமுறை.. வெளியான அதிரடி உத்தரவு !

அந்த நபர் அந்த பெண்ணை அருகில் உள்ள காட்டிற்கு அழைத்துச் சென்றார். காதலன் போர்வையில் அழைத்துச் சென்றவர் பெயர் ராகுல்.  ராகுல் அந்த ஒன்றும் தெரியாத 15 வயது சிறுமியை ஒரு பஸ்சுக்குள் விட்டுவிட்டு, நான் திரும்பி வருவேன் என்று கூறிவிட்டு ஓடிவிட்டான். அந்த சிறுமியை ரூ.15 லட்சத்துக்கு வேறு ஒருவருக்கு விற்பனை செய்து உள்ளான் என்று தெரிந்தது. பின்னர் சிறுமி மீண்டும் கமல் என்ற மற்றொரு நபருக்கு விற்கப்பட்டார்.

அவர் உத்தரபிரதேசத்தில் உள்ள பிஜ்னூரில் உள்ள சித்ரா என்ற பெண்ணிடம் சிறுமியை அழைத்துச் சென்றார். சிறுமியை வாங்கிய மூன்றாவது நபரான சித்ரா, அந்த சிறுமியை ஒரு மாதத்திற்குப் பிறகு தனது 45 வயது சகோதரனுக்கு வலுக்கட்டாயமாக திருமணம் செய்து வைத்தார். அப்போது சித்ராவின் மகன் சிறுமியை பபல முறை பலாத்காரம் செய்து உள்ளார். இந்த நேரத்தில்தான் பாதிக்கப்பட்ட சிறுமி சித்ராவின் மொபைலைப் பயன்படுத்தி தனது தாயாரை தொடர்பு கொண்டு தனது இருப்பிடம் குறித்து தகவல் தெரிவித்து உள்ளார். 

மேலும் செய்திகளுக்கு..நீங்க யார் பக்கம்? எடப்பாடி Vs ஓபிஎஸ்.. சசிகலா சொன்ன அந்த பேர்.. அதிர்ச்சியில் நிர்வாகிகள் !

இதற்கிடையில் பீகாரில் போலீசார் சிறுமியை காதலிப்பதாக ஏமாற்றிய ராகுலை கைது செய்தனர். இதனால் பயந்து போன சித்ரா சிறுமியை அழைத்துச் செல்லும்படி கமலிடம் கூறினார். கமலும் அவரது உதவியாளர் பீஷ்மும் சிறுமியை உத்தரகாண்டில் உள்ள காஷிபூருக்கு அழைத்து சென்றனர். தொடர்ந்து போலீசார் சித்ராவையும், அவரது மகன் லுவையும் கைது செய்தனர். இதை அறிந்த கமலும், பீஷ்மும் ஆத்திரமடைந்து, பாதிக்கப்பட்ட சிறுமியை பலமுறை பாலியல் பலாத்காரம் செய்து, காசிபூர் ரெயில் நிலையத்தில் விட்டுவிட்டு தப்பிச் சென்றனர். 

சிறுமியை ரெயில் நிலையத்தில் மீட்டனர் போலீசார். அந்த சிறுமியால் பேச முடியவில்லை. ஒரு மாதத்திற்கும் மேலாக அந்த சிறுமி அமைதியாகவே இருந்தார். அவருக்கு கவுன்சிலிங் அளிக்கபட்டது. சிறுமி மெதுவாக இயல்நிலைக்கு திரும்பி படிக்கத் தொடங்கினார். இப்போது கல்லூரிக் கல்விக்குத் தகுதி பெற்று உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகளுக்கு..முன்னாள் முதல்வர் என்.டி.ஆர் மகள் தூக்கிட்டு தற்கொலை.. அதிர்ச்சி சம்பவம் !

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

அரைகுறை ஆடையுடன் அமர்ந்திருந்த ஸ்ரேயா! கதறியும் விடாத தந்தை, மகன்! இறுதியில் நடந்த அதிர்ச்சி!
திருமணமான பெண்ணுடன் பழகுவதை நிறுத்திடு! கண்டித்த வேல்குமார்! நடுரோட்டில் கதறவிட்ட அதிர்ச்சி!