தலித் பையனையா காதலிக்கிறே !! பெற்ற மகளை கழுத்தை நெரித்துக் கொன்ற கொடூர தந்தை….

Published : Feb 05, 2019, 07:50 AM IST
தலித் பையனையா காதலிக்கிறே !!  பெற்ற மகளை கழுத்தை நெரித்துக் கொன்ற கொடூர தந்தை….

சுருக்கம்

ஆந்திர மாநிலத்தில் கல்லூரி மாணவி ஒருவரை, தலித் இளைஞர் ஒருவரைக் காதலித்தால் ஆத்திரமடைந்த அவரது தந்தையே கழுத்தை நெரித்துக் கொலை செய்துள்ளார். இதையடுத்து தந்தையை போலீசார் கைது செய்துள்ளனர்  

ஆந்திரா மாநிலம் பிரகாசம் மாவட்டம் தாலூரு மண்டலம் கொத்த பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் கோட்டா  வெங்கட் ரெட்டி. இவரது மகள் வைஷ்ணவி ஓங்கோலில் உள்ள  உள்ள  தனியார் கல்லூரி ஒன்றில் படித்து வந்தார்.

அவர் அதே வகுப்பில் படிக்கு மாணவர் ஒருவரை காதலித்து வந்ததாக தெரிகிறது. இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக அவர்கள் காதலித்து வந்த நிலையில் இவர்களது காதல் வைஷ்ணவியின் பெற்றோருக்கு தெரிய வந்தது.

ஆனால் வைஷ்ணவியின் காதலன் தலித் என்பதால் அவர்களது காதலை ஏற்க பெற்றோர் மறுத்துவிட்டனர்.

இந்நிலையில் நேற்று வைஷ்ணவி வழக்கம் போல் கல்லூரிக்கு சென்றார். ஆனால் அவருக்கு உடல்நிலை சரியில்லததால் மாலை  சீக்கிரமே வீட்டுக்கு திருப்பியுள்ளார். அப்போது வைஷ்ணவிக்கும் அவரது தந்தைக்கும் இடையே காதல் விவகாரம் தொடர்பாக பேச்சு எழுந்துள்ளது.

அப்போது காதலனையே திருமணம் செய்வேன் என குடும்பத்தாருடன் வாக்குவாதம் செய்து, வைஷ்ணவி உறுதியாக இருந்தார். இதனால் ஆத்திரமடைந்த கோட்ட வெங்கட் ரெட்டி வைஷ்ணவியை பெற்ற மகள் என்றும் பாராமல்  கழுத்ததை நெரித்து கொலை செய்ததாக கூறப்படுகிறது.

வைஷ்ணவி கொலை செய்யப்பட்டது பற்றிய தகவல் அறிந்த போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஓங்கோல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கி உள்ளனர்.

ஆந்திர மாநிலத்தில் கடந்த ஆண்டு பிரனவ் என்ற தலித் இளைஞர் அம்ருதா என்ற பெண்ணை திருமணம் செய்ததால் அம்ருதாவின் தந்தை கூலிப்படையை ஏவி கொலை செய்தார். இதே போல் மாதவன் – சந்தியா தம்பதி தாக்கப்பட்டனர்.

தற்போது இதன் தொடர்ச்சியாக ஆந்திராவில் காதலித்த குற்றத்துக்காக பெண்ணின் தந்தையே  தண்டனை கொடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

PREV
click me!

Recommended Stories

அடச்சீ.. இப்படி ஒரு தாயா? 31 வயது கள்ளக்காதலனுக்கு 18 வயது மகளை திருமணம் செய்து வைத்த கொடூரம்
பட்டப்பகலில் நடந்த அதிர்ச்சி.. காப்பாத்துங்க.. காப்பாத்துங்க.. கணவன் கண்முன்னே அலறிய மனைவி..