கள்ளக்காதலுக்காக கணவனை போட்டுத்தள்ளிய மருத்துவர்... மந்தாரப் புன்னகையால் மாட்டிக் கொண்ட மனைவி..!

Published : Feb 04, 2019, 04:27 PM ISTUpdated : Feb 04, 2019, 04:35 PM IST
கள்ளக்காதலுக்காக கணவனை போட்டுத்தள்ளிய மருத்துவர்... மந்தாரப் புன்னகையால் மாட்டிக் கொண்ட மனைவி..!

சுருக்கம்

ஆந்திராவில் கணவரின் சடலத்தை பார்த்து மனைவி சிரித்ததால் சந்தேகம் அடைந்த போலீசார், விசாரணை நடத்தியதில் கூலிப்படையை ஏவி கொலை செய்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திராவில் கணவரின் சடலத்தை பார்த்து மனைவி சிரித்ததால் சந்தேகம் அடைந்த போலீசார், விசாரணை நடத்தியதில் கூலிப்படையை ஏவி கொலை செய்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திராவின் பிரகாசம் மாவட்டம் நகுலவரம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெகன்மோகன் ரெட்டி. அவரது மனைவி ரஜினி. அவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் ஜெகன்மோகன் ரெட்டிக்கு அடிக்கடி உடல்நிலை சரியில்லாமல் போனதால் அதே பகுதியில் வசித்து வரும் டாக்டர் வெங்கட நாராயணா என்பவரிடம் சிகிச்சை பெற்று வந்துள்ளார். 

அப்போது டாக்டர். வெங்கட நாராயணாவுக்கும், ஜெகன் மோகனின் மனைவி ரஜினிக்கும் இடையே நாளடைவில் பழக்கம் ஏற்பட்டு கள்ளக்காதால மாறியது. அடிக்கடி இருவரும் தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்துள்ளனர். இந்த விவகாரம் ஜெகன்மோகன் ரெட்டிக்கு தெரியவந்ததையடுத்து ரஜினியை கடுமையாக கண்டித்தார். இதனையடுத்து தங்களுக்கு இடையூறாக இருந்த ஜெகன்மோகன் ரெட்டியை கொலை செய்ய அவரது மனைவியும், வெங்கட நாராயணாவும் திட்டமிட்டனர். 

திட்டத்தின்படி ஜெகன்மோகன் ரெட்டியை அத்மகூர் வனப்பகுதிக்கு கூட்டிச்சென்ற டாக்டர் வெங்கட நாராயணா, கூலிப்படையினர் உதவியுடன் அவரை கொலை செய்துள்ளார். அதேவேளையில் தனது கணவனை காணவில்லை என காவல்நிலையத்தில் அவரது மனைவி ரஜினி புகார் தெரிவித்துள்ளார். விசாரணையை தொடங்கிய போலீசார் வனப்பகுதியில் ஜெகன்மோகனின் உடலை கைப்பற்றியுள்ளனர். 

இதனையடுத்து கணவர் இறந்த செய்தியை ரஜினிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. கணவரின் உடலை பார்த்து அதிர்ச்சி அடையாமல் கதறி அழாமல் லேசாக சிரித்துள்ளார். ரஜினி சிரிப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்த போலீசார் சந்தேகமடைந்தனர். அதனை தொடர்ந்து மனைவிடம் போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தினர். இதனையடுத்து மனைவி கணவனை கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். அதில் தானும், டாக்டரும் இணைந்தே தன் கணவனை கொலை செய்ததாக ரஜினி தெரிவித்தார். இதனைத்தொடர்ந்து ரஜினி, டாக்டர் வெங்கட நாராயணா உள்ளிட்ட 5 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

PREV
click me!

Recommended Stories

அடச்சீ.. இப்படி ஒரு தாயா? 31 வயது கள்ளக்காதலனுக்கு 18 வயது மகளை திருமணம் செய்து வைத்த கொடூரம்
பட்டப்பகலில் நடந்த அதிர்ச்சி.. காப்பாத்துங்க.. காப்பாத்துங்க.. கணவன் கண்முன்னே அலறிய மனைவி..