4 வயது சிறுமியை கொடூரமாக நாசம் செய்த காமுகன்... பள்ளி ஆசிரியருக்கு தூக்கு..!

By Thiraviaraj RMFirst Published Feb 4, 2019, 4:04 PM IST
Highlights

மத்திய பிரதேச மாநிலத்தில் 4 வயது பெண் குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில்  பள்ளி ஆசிரியருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.  
 

மத்திய பிரதேச மாநிலத்தில் 4 வயது பெண் குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில்  பள்ளி ஆசிரியருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.  

2018 ஜூலை மாதம் மத்தியபிரதேச மாநிலம், சாட்னா மாவட்டத்தை சேர்ந்த 4 வயது பெண் குழந்தை பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். அவர் உயிருக்கு போராடிய நிலையில் மந்சாவூர் நகரத்தில் கண்டெடுக்கப்பட்டார். மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டிருந்த அந்த சிறுமி டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்த சம்பவம் தொடர்பாக மாவட்ட காவல்துறை விசாரணையை தொடங்கியது. சம்பவம் நடந்த சில நாட்களுக்குள், ஜூலை 1, 2018 அன்று , உச்சேரேவில் உள்ள பள்ளியில் பணியாற்றி வரும் 27 வயதான ஆசிரியர் மஹேந்திர சிங் கோனாட் என்பவர் கைது செய்யப்பட்டார். அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. சிறுமியை வன்கொடுமை செய்த குற்றத்தை அவர் ஒப்புக்கொண்டார். 

இதுதொடர்பான வழக்கு கடந்த வெள்ளிக்கிழமை சாட்னா கீழ் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது தீர்ப்பை வாசித்த நீதிபதி, சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த மஹேந்திர சிங் கோனாட்டுக்கு தூக்கு தண்டனை விதித்து உத்தரவிட்டார். இந்த தண்டனை மத்தியப் பிரதேசத்தில் உள்ள ஜபல்பூர் மத்திய சிறைச்சாலையில் மார்ச் 2ம் தேதிக்குள் நிறைவேற்றப்பட வேண்டும் என அவர் குறிப்பிட்டார். 

முன்னதாக, ஆசிரியர் கோனாட் கைது செய்யப்பட்ட போது, சிறப்பு நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. கடந்த செப்டமர் 19ம் தேதி தீர்ப்பு வழங்கிய நீதிபதி தினேஷ் ஷர்மா, ஆசிரியர் கோனாட்டுக்கு தூக்கு தண்டனை வழங்கினார். இதை எதிர்த்து ஜனவரி 25ம் தேதி ம.,பி உயர்நீதிமன்றத்தில் இந்த வழக்கு மேல் முறையீடு செய்யப்பட்டது. அதை விசாரிக்க முடியாது என உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இந்நிலையில் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் ம.,பி சிறப்பு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை சாட்னா மாவட்ட நீதிமன்றம் உறுதி செய்துள்ளது. 

click me!