
கடந்த சில நாட்களுக்கு முன்பாக பாகிஸ்தான் நாட்டின் பஞ்சாப் மாகாணத்தில் 25 வயது மதிக்க தக்க கர்ப்பிணி பெண் ஒருவர் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பஞ்சாப் மாகாணத்தில் வீட்டில் தனியாக இருந்த கர்ப்பிணி வீட்டிற்குள் 5 நபர்கள் ஆயுதங்களுடன் நுழைந்துள்ளனர்.
அந்த பெண் நிறைமாத கர்ப்பிணி என்றும் பாராமல் கூட்டு பலாத்காரம் செய்துள்ளனர். இந்த சம்பவத்தை அடுத்து பஞ்சாப் போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். கர்ப்பிணிப் பெண்ணின் மருத்துவப் பரிசோதனை முடிந்துவிட்டதாகவும், பாதிக்கப்பட்ட பெண்ணின் ரத்த மாதிரியும் தடயவியல் பரிசோதனைக்காக லாகூர் அனுப்பப்பட்டுள்ளதாக காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
மேலும். இதுபோல்கடந்த மாதம் கராச்சியைச் சேர்ந்த 25 வயது இளம்பெண் ஓடும் ரயிலில் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம், அந்நாட்டில் பெண்களின் உரிமைகள் தொடர்பான பாகிஸ்தானின் மோசமான சாதனையை வெளிச்சம் போட்டுக் காட்டியது.இரண்டு பிள்ளைகளுக்கு தாயின் அப்பெண்ணை, டிக்கெட் பரிசோதகர் உட்பட மூன்று பேர் பாலியல் பலாத்காரம் செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் உள்ள கராச்சியில் இருந்து முல்தானுக்கு கடந்த வாரம் அவர் பயணம் செய்தார் என்று பாகிஸ்தானின் ரயில்வே அமைச்சகம் கூறியுள்ளது. ஏர் கண்டிஷனிங் கொண்ட ஒரு வண்டிக்கு செல்லுமாறு ஆண்கள் கூறியதை அடுத்து இந்த சம்பவம் நடந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த சம்பவம் தொடர்பில் மூன்று பேரும் கற்பழிப்பு சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர்.இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படிங்க : "வேற வழியில்லாம ஸ்விகி ஊழியரை அடித்தேன்!" சஸ்பெண்ட் போலீஸ்காரர் - ஆன்லைனில் கதறல் !!
இதையும் படிங்க : கர்ப்பிணிகள் சாப்பிடும் உணவில் கூட ஊழல்.. திமுக ஊழல் பெருச்சாளிகள் கூடாரம்.! அண்ணாமலை ஆவேசம் !