20 பவுன் நகையை விற்று ஆன்லைன் ரம்மி விளையாட்டு.. 2 குழந்தைகளின் தாய் எடுத்த விபரீத முடிவு!

Published : Jun 06, 2022, 02:37 PM IST
20 பவுன் நகையை விற்று ஆன்லைன் ரம்மி விளையாட்டு.. 2 குழந்தைகளின் தாய் எடுத்த விபரீத முடிவு!

சுருக்கம்

Online Rummy : ஆன்லைன் ரம்மி விளையாடி லட்ச கணக்கில் இழந்ததால் ஏற்பட்ட மன உளைச்சல் காரணமாக பெண் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

சென்னை மணலி புதுநகரை சேர்ந்தவர் பாக்யராஜ். தனியார் நிறுவன ஊழியரான இவரது மனைவி பவானி. இவருக்கு வயது 29. இவர்களுக்கு திருமணமாகி 6 ஆண்டுகளான நிலையில், இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.  பாக்யராஜ் கந்தன்சாவடியில் உள்ள ஹெல்த்கேர் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். திருமணத்துக்குப் பிறகு மண வாழ்க்கை பவானிக்கு இனிமையானதாகவே இருந்துள்ளது. இந்த நிலையில் கடந்த ஓராண்டுக்கு முன்பு ஆன்லைன் ரம்மி விளையாட்டில் பவானிக்கு ஆர்வம் ஏற்பட்டது.

எப்போதும் அதைப்பற்றியே பேசிக்கொண்டிருந்தார். ஆன்லைன் ரம்மி விளையாட்டில் அதிகமாக ஈடுபட்டார். பெரிய அளவில் பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற ஆசையில் ஆன்லைன் ரம்மி விளையாட்டில் பணம் கட்டி விளையாடுவதை பவானி பழக்கமாக்கி கொண்டார். ஆன்லைன் ரம்மி விளையாட்டு தொடர்பாக வரும் விளம்பரங்கள் அவருக்கு அதில் மேலும் ஆர்வத்தை தூண்டியது. இதனால் பல்வேறு வழிகளிலும் பணத்தை தயார் செய்து பவானி ரம்மி விளையாட்டில் மூழ்கினார். 

இதில் அவருக்கு பண இழப்பு ஏற்பட்டது. ஆனால் பவானி ரம்மி விளையாட்டுக்கு முழுமையாக அடிமையானதால் அதில் இருந்து அவரால் மீள முடியவில்லை. பவானி ரம்மி விளையாட்டில் அதிக ஈடுபாடு கொண்டிருப்பதை பார்த்து அவரது கணவர் பாக்யராஜ் மற்றும் பெற்றோர் கண்டித்தனர். ஆனால் அவர்களது பேச்சை பவானி கேட்கவில்லை. இந்நிலையில் இவர் திடீரென வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். 

இது குறித்து தகவலறிந்த மணலி புதுநகர் காவல் துறையினர் சடலத்தை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இது குறித்து நடத்தப்பட்ட விசாரணையில் மணலி புதுநகரில் இருந்து கந்தன்சவடிக்கு ரயிலில் சென்று வரும் போது, ஆன்லைனில் ரம்மி விளையாடி வந்ததாகவும், பல இடங்களில் கடன் பெற்று ரம்மி விளையாடி வந்ததும் தெரியவந்துள்ளது. 

இதுவரை 20 சவரன் நகைகளை விற்று ரம்மி விளையாடியதும், மேலும் தன் சகோதரிகள் இருவரிடம் தலா ஒன்றரை லட்சம் என 3 லட்சம் கடன் பெற்று ஆன்லைன் ரம்மி விளையாட்டில் பணத்தை இழந்துள்ளதாகவும் காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. திருமணமாகி 6 ஆண்டுகளான நிலையில் தற்கொலை என்பதால் தண்டையார்பேட்டை வருவாய் கோட்டாட்சியர் தலைமையில் விசாரணை நடைபெறும் எனவும் காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2 குழந்தைகளின் தாய் நகைகளை விற்று ஆன்லைன் ரம்மி விளையாடி பணம் இழந்த விரக்தியில் தற்கொலை செய்துகொண்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க : "வேற வழியில்லாம ஸ்விகி ஊழியரை அடித்தேன்!" சஸ்பெண்ட் போலீஸ்காரர் - ஆன்லைனில் கதறல் !!

இதையும் படிங்க : கர்ப்பிணிகள் சாப்பிடும் உணவில் கூட ஊழல்.. திமுக ஊழல் பெருச்சாளிகள் கூடாரம்.! அண்ணாமலை ஆவேசம் !

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

கதறிய மருமகள் நிகிலா.. விடாத 52 வயது மாமனார்.. ரசித்த மகன் பிரதீப்.. அமமுக பிரமுகர்கள் வெறியாட்டம்
நான் உனக்கு போதாதா! என் பொண்ணு கேக்குதா.. ஆத்திரத்தில் 46 வயது ஆன்டி.. அலறிய சூர்ய பிரதாப் சிங்