14 வயசு பையன் செய்யுற வேலையா இது.. 20 பெண்களை சீரழித்த 9ம் வகுப்பு பள்ளி மாணவன்

Published : Aug 13, 2022, 07:05 PM IST
14 வயசு பையன் செய்யுற வேலையா இது.. 20 பெண்களை சீரழித்த 9ம் வகுப்பு பள்ளி மாணவன்

சுருக்கம்

9 ஆம் வகுப்பு மாணவன் ஒருவன் 20க்கும் மேற்பட்ட பெண்களை பலாத்காரம் செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கேரளா மாநிலத்தில் நடைபெற்ற சம்பவம் ஒன்று அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கேரளா, கண்ணூர் நகரில் ஒரு தனியார் பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியில் புதிதாக மாணவி சேர்ந்திருக்கிறார். அந்த மாணவி மிகவும் தயக்கத்துடன் பள்ளி வகுப்பறையில் காணப்பட்டார். இந்நிலையில் அந்த மாணவியிடம் நட்பு முறையில் நெருங்கிப் பழகியுள்ளான் சக மாணவன் ஒருவன். அந்த மாணவியும், அம்மாணவனுடன் நட்பாக பழகி வந்ததாக கூறப்படுகிறது.

அந்த மாணவன் ஒருகட்டத்தில் போதைப் பொருட்களைக் கொடுத்து, இது உன்னுடைய தயக்கத்தைப் போக்கி புத்துணர்ச்சி தரும், பயன்படுத்தி பார் என்று கூறியுள்ளார். போதைப்பொருள் விபரீதம் அறியாத மாணவியும் அதனை தொடர்ந்து பயன்படுத்தி உள்ளார். அந்த மாணவியை போதைப்பொருளுக்கு அடிமையாக்கி, தான் சொல்வதை கேட்க வேண்டும் என்று கூறியுள்ளன. 

மேலும் செய்திகளுக்கு..பாஜக ஆட்சிக்கு வந்தால் பெரியார் சிலை கதி? நாங்க யாருக்கு சிலை வைப்போம் தெரியுமா ? அண்ணாமலை அதிரடி

மாணவியைப் போதைப் பொருளுக்கு அடிமையாக்கிய அந்த மாணவன் அவரை பலாத்காரம் செய்து வீடியோவாக பதிவு செய்து மாணவியைத் தொடர்ந்து மிரட்டியுள்ளான். ஒரு நாள் மாணவியின் மொபைல் போனை தற்செயலாக பார்த்து அதிர்ச்சி அடைந்த பெற்றோர், அந்த மாணவியை வயநாடு போதைப்பொருள் மீட்பு மையத்தில் அனுமதித்துள்ளனர். 

இந்த விபரீதத்துக்கு காரணமான மாணவன் மேல் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர் பெண்ணின் பெற்றோர்.போலீசார் நடத்திய விசாரணையில்  இந்த பெண் மட்டுமல்லாமல், மேலும்  20க்கும் மேற்பட்ட பெண்களை மாணவன் போதைப் பொருளுக்கு அடிமையாக்கி பலாத்காரம் செய்தது தெரியவந்துள்ளது. இதனையடுத்து மாணவனை போக்சோ சட்டத்தில் போலீசார் கைதுசெய்தனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகளுக்கு..“ஜெயலலிதா இருந்திருந்தால்.. செருப்படி விழுது தலைவரே.!” குமுறும் திமுகவினர் !

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

காதலியை ஆசைவார்த்தை கூறி காட்டுக்கு அழைத்து சென்ற காதலன்! அலறிய சித்ரப் பிரியா! அடுத்து நடந்த அதிர்ச்சி!
சினிமா மிஞ்சும் திகில்.. காட்டிக்கொடுத்த காலி மதுபாட்டில்கள் பார் கோடுகள்.. பெண் கொலை வழக்கில் ஓய்வு பெற்ற காவலர் கைது