சென்னை அருகே தனியார் வங்கியில் பட்ட பகலில் மர்ம நபர்கள் கொள்ளை அடுத்து சென்றுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை அருகே தனியார் வங்கியில் பட்ட பகலில் மர்ம நபர்கள் கொள்ளை அடுத்து சென்றுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னையில் அரும்பாக்கம் பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் வங்கிக்குள் இன்று காலை இரு சக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் அதிரடியாக புகுந்தனர். இதனால் அங்கு பதற்றமான சூழல் ஏற்பட்டது. அப்போது அங்கிருந்த காவலாளி மற்றும் ஊழியர்களை கத்தியை காட்டி மிரட்டிய மர்ம நபர்கள் அங்கிருந்த ஊழியர்களை கட்டிப் போட்டுவிட்டு வங்கியில் இருந்த பணம் மற்றும் நகையை கொள்ளையடித்து விட்டு தப்பி சென்றனர்.
இதையும் படிங்க: மின்சாரம் தாக்கி மின்வாரிய ஊழியர் பலி… பணியின் போது ஏற்பட்ட சோகம்!!
இதுக்குறித்து தகவல் அறிந்து வந்த விரைந்து சென்ற காவல்துறை கூடுதல் ஆணையர் அன்பு, துணை ஆணையர் விஜயகுமார் தலைமையிலான காவல்துறையினர் விசாரணை நடத்தினர். மோப்ப நாய் உதவியுடன் விசாரணை மேற் கொள்ளப்பட்டது. அந்த வங்கியில் இருந்த சிசிடிவி காட்சிகளை காவல்துறையினர் ஆய்வு செய்தனர்.
இதையும் படிங்க: மதுரை வீரர் லட்சுமணன் வீர மரணம்.. ராணுவ மரியாதையுடன் உடல் தகனம் !
முதல் கட்ட விசாரணையின் முடிவில் அந்த வங்கியில் வேலை பார்த்த முன்னாள் ஊழியரே தனது நண்பர்களுடன் வந்து கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது தெரிய வந்துள்ளது. கொள்ளையடிக்கப்பபட்ட பணம் மற்றும் நகைகளின் மொத்த மதிப்பு 20 கோடி ரூபாய் இருக்கும் என தெரிய வந்துள்ளது. கொள்ளைர்களை பிடிக்க 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. பட்டப்பகலில் நடைபெற்ற வங்கிக் கொள்ளை அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.