மத்திய பிரதேசம் மாநிலம் ஜபல்பூர் உள்ள நியூ லைஃப் மெடிசிட்டி என்ற தனியார் மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் 8 பேர் உடல் கருகி உயிரிழந்துள்ளனர். 23 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
மத்திய பிரதேசம் மாநிலம் ஜபல்பூர் உள்ள நியூ லைஃப் மெடிசிட்டி என்ற தனியார் மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் 8 பேர் உடல் கருகி உயிரிழந்துள்ளனர். 23 பேர் படுகாயமடைந்துள்ளனர். இந்த விபத்து ஒட்டுமொத்த நாட்டையும் உலுக்கியுள்ளது. தீயணைப்பு படை வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்து தீயை கட்டுப்படுத்த போராடி வருவதுடன், மருத்துவமனையில் உள்ள நோயாளிகளை பத்திரமாக வெளியேற்ற முயற்சித்து வருகின்றனர்.
சாலை விபத்துக்கள், மருத்துவமனையில் தீ விபத்துக்கள் போன்ற சம்பவங்கள் பரவலாக அரங்கேறி வருகிறது. இந்நிலையில் ஜபல்பூரில் உள்ள கோஹல்பூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தாமோ நாக்கா அருகே உள்ள நியூ லைப் மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் பிற்பகல் தீ விபத்து ஏற்பட்டது. இதுகுறித்து தகவலை மாவட்ட எஸ்பி பகுகுணா உறுதிப்படுத்தியுள்ளார். மருத்துவமனையில் மீட்பு பணிகள் நடைபெற்று வருவதாகவும் அவர் கூறியுள்ளார். ஷார்ட் சர்க்யூட் காரணமாக தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதுகுறித்து பேசியுள்ளார் மத்திய பிரதேச மாநில முதல்வர் சிவராஜ் சிங் சவுகான், ஜபல்பூரில் உள்ள மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்ட செய்தி மிகுந்த வேதனையளிக்கிறது, உள்ளூர் நிர்வாகம் மற்றும் மாவட்ட ஆட்சியருடன் தொடர்ந்து தொடர்பில் இருந்து வருகிறேன், மீட்பு பணியை துரிதப்படுத்த தேவையான உதவிகளை செய்த தலைமைச் செயலாளருக்கு உத்தரவிடப்பட்டுள்ளேன், நிவாரண பணி மற்றும் மீட்பு பணி குறித்து துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தி உள்ளேன்.
இதையும் படியுங்கள்: 100 முறைக்கும் மேல் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட பெண்.. இன்ஸ்டா காதல் விபரீதம் - அதிர்ச்சி சம்பவம்
ஜபல்பூரில் உள்ள நியூ லைப் மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் விலை மதிப்பற்ற உயிர்கள் பிரிந்துள்ளன, எட்டு பேர் உயிரிழந்துள்ள செய்தி அறிந்து மனம் வருந்துகிறேன், உயிரிழந்தவர்களின் ஆன்மா சாந்தி அடைய இறைவனை பிரார்த்திக்கிறேன். மேலும் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 5 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்க உத்தரவிட்டுள்ளேன் என அவர் கூறியுள்ளார்.
மேலும் இது குறித்து தெரிவித்துள்ளார் முன்னாள் முதல்வர் மற்றும் எம்.பி கமல்நாத், ஜபல்பூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் பலர் உயிரிழந்துள்ளனர். அது மிகுந்த வேதனையான சம்பவம் ஆகும், உயிரிழந்த ஆன்மாக்களுக்காக பிரார்த்திக்கிறேன், தீ விபத்தில் காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய விரும்புகிறேன் என தெரிவித்துள்ளார்.
இதையும் படியுங்கள்: பள்ளி மாணவர்களை குறி வைக்கும் போதை கும்பல்.! நூதன முறையில் கஞ்சா விற்பனை... அதிர்ச்சியில் போலீஸ்
மேலும் இது குறித்து தெரிவித்துள்ள மத்திய அமைச்சர் ஜோதிர் ஆதித்ய சிந்தியா, ஜபல்பூரில் உள்ள நியூ லைப் மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்துள்ள சம்பவம் வருத்தம் அளிக்கிறது. இந்த விபத்தில் உயிரிழந்தவர்கள் ஆன்மா சாந்தி அடையவும், அவர்களின் குடும்பங்களுக்கு இந்த இழப்பைத் தாங்கும் மனவலிமையை வழங்கவும் இறைவனைப் பிரார்த்திக்கிறேன், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய விரும்புகிறேன் என தெரிவித்துள்ளார்.
மத்திய பிரதேச மாநிலம் ஜபல்பூரில் உள்ள மருத்துவமனையில் தீ விபத்து ஏற்பட்டதில் பலர் உயிரிழந்துள்ளது மிகவும் வேதனை அளிக்கிறது. இறந்தவரின் ஆத்மா சாந்தி அடையவும், இந்த வேதனையைத் தாங்கும் சக்தியை குடும்பத்தினருக்கு வழங்கவும் கடவுளை வேண்டுகிறேன், விபத்தில் காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய விரும்புகிறேன் இவ்வாறு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா தெரிவித்துள்ளார்.