சென்னை அடுத்த திருவள்ளூரில் உள்ள பள்ளி ஒன்றில் 6ம் வகுப்பு மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த அதே பள்ளியைச் சேர்ந்த 3 மாணவர்களிடம் காவல் துறையினர் விசாரணை.
சென்னை அடுத்த திருவள்ளூரில் பள்ளி ஒன்றில் 6ம் வகுப்பு மாணவியை அதே பள்ளியைச் சேர்ந்த 9, 10ம் வகுப்பு மாணவர்கள் 3 பேர் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். இது தொடர்பாக காவல் துறையினர் கூறுகையில், பள்ளியில் 6ம் வகுப்பு மாணவியை கடந்த ஆகஸ்ட் 2ம் தேதி 3 மாணவர்கள் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.
இது தொடர்பாக மாணவி தனது வகுப்பு ஆசிரியரிடம் முறையிட்டும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அதன் பின்னர் மாணவி ஆகஸ்ட் 3ம் தேதி மற்றும் 4ம் தேதிகளிலும் மீண்டும் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப் பட்டுள்ளார். இந்த நிலையில் தொடர்ந்து வயிற்று வலி என்று மாணவி கூறியதால் அவரது பெற்றோர் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.
விளையாட்டாக மீன் பிடிக்கச்சென்ற சிறுமிகளுக்கு நேர்ந்த சோகம்; ஒரே குடும்பத்தில் 2 சிறுமிகள் பலி
அங்கு மாணவி தனக்கு நடந்த கொடுமைகளை மருத்துவர்களிடம் எடுத்து கூறியிருக்கிறார். இதனைக் கேட்டு அதிர்ந்துபோன மருத்துவர்கள் உடனடியாக மாணவியை பரிசோதனைக்கு உட்படுத்தியதில் மாணவி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டது உறுதி செய்யப்பட்டது. இதன் பின்னர் மாணவர்கள் மீது போக்சோ வழக்கில் குற்றம் பதிவு செய்யப்பட்டது.
ஈரோடு நீதிமன்றத்தில் சீமான் நேரில் ஆஜர்; நாம் தமிழர் கட்சி தம்பிகளால் பரபரப்பான நீதிமன்ற வளாகம்
காவல் துறை பாதுகாப்பில் மாணவர்கள் எடுக்கப்பட்டு அவர்களிடம் வாக்குமூலம் பெறப்பட்டது. பின்னர் சிறார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். குற்றச்செயலில் ஈடுபட்டவர்கள் அனைவரும் சிறார்கள் என்பதால் ஆலோசனையும், அறிவுரையும் மட்டும் வழங்கி அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பாக பள்ளி நிர்வாகத்திடம் பேச இருப்பதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.