Cyber Crime: முதியவருக்கு திருமண ஆசை காட்டி 60 லட்சம் அபகரித்த பெண்! மேட்ரிமோனி தளத்தில் நூதன மோசடி!

By SG Balan  |  First Published Feb 13, 2023, 3:41 PM IST

மனைவியை இழந்து மறுமணம் செய்துகொள்ள விரும்பிய முதியவரிடம் ஆபாசமாகப் பேசி 60 லட்சம் ரூபாய் பறித்த பெண்ணை சைபர் க்ரைம் பிரிவினர் தேடிவருகின்றனர்.


திருமணத்தில் மேட்ரிமோனி இணையதளத்தில் பதிவு செய்திருந்த முதியவரை மிரட்டி ரூ.60 லட்சம் பணத்தை அபகரித்த பெண்ணை சைபர் க்ரைம் காவல்துறையினர் தேடுவருகின்றனர்.

மனைவியை இழந்து தனிமையில் வசித்துவரும் 65 வயது முதியவர் ஒருவர் மறுமணம் செய்துகொள்ள விரும்பி மேட்ரிமோனி இணையதளத்தில் பதிவு செய்திருக்கிறார். அவரிடம் ஒரு பெண் உரையாட முன்வந்திருக்கிறார். இருவரும் மொபைல் எண்களைப் பகிர்ந்துகொண்டு பேச ஆரம்பித்தனர். பின், ஒருநாள் இருவரும் வீடியோ காலில் பேசியுள்ளனர்.

Tap to resize

Latest Videos

Aero India 2023 Photos: கண்களுக்கு விருந்து அளிக்கும் ஏரோ இந்தியா 2023 விமானக் கண்காட்சி!

அப்போது அந்தப் பெண் தனது ஆடைகளை களைந்து ஆபாசமான பேசியிருக்கிறார். முதியவரையும் ஆடைகளைக் கழற்ற வற்புறுத்தியுள்ளார். பின் அந்த முதியவர் ஆடை இல்லாமல் தன்னுடன் பேசுவதை ரகசியமாக ரெக்கார்டு செய்துள்ளார்.

அதிலிருந்து அந்த வீடியோவைக் காட்டி அந்த முதியவரை மிரட்டியுள்ளார்.  தான் கேட்கும்போது பணம் கொடுக்காவிட்டால் வீடியோவை சமூக வலைத்தளங்களில் வெளியிடுவதாகவும் முதியவரின் உறவினர் மற்றும் நண்பர்களுக்கும் அனுப்புவதாகவும் மிரட்டி இருக்கிறார்.

AeroIndia2023: புதிய இந்தியா எந்த வாய்ப்பையும் தவறவிடாது! பிரதமர் மோடி பெருமிதம்

அந்தப் பெண்ணின் தொடர் அச்சறுத்தலுக்கு பயந்து அவ்வப்போது பணம் கொடுத்து வந்திருக்கிறார். இவ்வாறு 60 லட்சம் ரூபாயை இழந்திருக்கிறார். பண நெருக்கடியும் மன உளைச்சலும் ஏற்பட்ட நிலையில் சைபர் க்ரைம் காவல்துறையினரிடம் புகார் கொடுத்திருக்கிறார்.

சைபர் க்ரைம் பிரிவுக்கு வரும் இதுபோன்ற மிரட்டல் புகார்கள் பெரும்பாலும் சமூக வலைத்தளங்களில் இருந்துதான் வருவது வழக்கம். முதல் முறையாக மேட்ரிமோனியல் தளத்தில் இருந்து புகார் வந்துள்ளது. பெரும்பாலான வழக்குகளில் பாதிக்கப்பட்டது பெண்களாக இருப்பார்கள். ஆனால், இந்த வழக்கில் முதியவர் ஒருவர் பாதிக்கப்பட்டுள்ளார்.

புகாரின் பேரில் விசாரணையைத் தொடங்கியுள்ள சைபர் க்ரைம் காவல்துறையினர், முதியவர் பணம் செலுத்திய வங்கிக் கணக்கு விவரம், பெண்ணின் மொபைல் எண் ஆகியவற்றைக் கொண்டு பணம் பறித்த பெண்ணைக் கண்டுபிடிக்க முயற்சி செய்கின்றனர்.

Free Scooter: தமிழகத்தை பின்பற்றுகிறதா பாஜக? திரிபுராவில் பெண்களுக்கு இலவச ஸ்கூட்டர்!

click me!