கல்லூரி மாணவி வயிற்றில் 5மாத சிசு ..அதிர்ச்சியில் பெற்றோர்.. போலீசார் தொடர்ந்து விசாரணை...

Published : Mar 18, 2020, 09:31 AM IST
கல்லூரி மாணவி வயிற்றில் 5மாத சிசு ..அதிர்ச்சியில் பெற்றோர்.. போலீசார் தொடர்ந்து விசாரணை...

சுருக்கம்

திருச்சியில் உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்ட கல்லூரி மாணவியை, அவரது பெற்றோர் மருத்துவமனையில் அனுமதித்த போது, அவரது வயிற்றில் இறந்த நிலையில் 5 மாத சிசு இருந்தது கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர்.  

T.Balamurukan

திருச்சியில் உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்ட கல்லூரி மாணவியை, அவரது பெற்றோர் மருத்துவமனையில் அனுமதித்த போது, அவரது வயிற்றில் இறந்த நிலையில் 5 மாத சிசு இருந்தது கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர்.

திருச்சி பீமநகரைச் சோ்ந்த 21 வயது மாணவி, தனியார் கல்லூரி ஒன்றில் பி.காம். படித்து வருகிறார்.திடீரென உடல் நலக் குறைவு காரணமாக வீட்டில் இருந்தவருக்கு  வயிற்றுவலி அதிகரித்துள்ளது.இதையடுத்து அவரது பெற்றோர் திருச்சி மகாத்மாகாந்தி நினைவு அரசு மருத்துவமனையில் மாணவியை அனுமதித்தனா்.அங்கு மருத்துவா்கள் மாணவியைப் பரிசோதித்த போது, அவரது வயிற்றில் 5 மாத சிசு இறந்த நிலையில் இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து கடந்த 7- ஆம் தேதி மாணவியின் வயிற்றிலிருந்து சிசு அகற்றப்பட்டது.

கல்லூரி மாணவிக்கும் , எதிர் வீட்டைச் சோ்ந்த இளைஞருக்கும் காதல் ஏற்பட்டிருக்கிறது. இந்த விஷயம் இரண்டு பேர் பெற்றோருக்கும் தெரிய வந்திருக்கிறது. மாணவி படிப்பை முடித்ததும் டும்டும் வைத்துக்கொள்ளலாம் என பெற்றோர்கள் கிரீன் சிக்னல் காட்ட வரம்பு மீறி விட்டார்கள் காதலர்கள். கல்யாணத்துக்கு முன்பே பல முறை உடலுறவு வைத்திருக்கிறார்கள் காதலர்கள்.மாணவியின் படிப்பு முடிந்த பின்னா் திருமணத்தை நடத்திக் கொள்ளலாம் என இருதரப்பு பெற்றோரும் முடிவு செய்திருந்த நிலையில் மாணவி கர்ப்பமானாள்.இந்த விஷயம் தெரியாமல் இருந்ததால் மாணவிக்கு மருத்துவமனைக்கு போனபோது தான் தெரிய வந்தது தான் கர்ப்பமான விஷயம். 

 மருத்துவமனையில் இருந்து கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்துக்குத் தகவல் அளிக்கப்பட்டது. இதையடுத்து மகளிர் போலீசார் பெண்ணின் கா்ப்பத்துக்கு காரணமாக இருந்த, தற்போது வேலைக்காக வெளிநாட்டுக்குச் சென்றுள்ள இளைஞரைத் தொடா்பு கொண்டு விசாரணை நடத்தினார்கள்.அந்த இளைஞர், தான் திருமணம் செய்து கொள்ளூவதாக உத்திரவாதம் அளித்ததை தொடர்ந்து பிரச்சனை முடிவுக்கு வந்திருக்கிறது.

PREV
click me!

Recommended Stories

பள்ளி, கல்லூரி மாணவிகளை ஒரே நேரத்தில் கரெக்ட் செய்த இளைஞர்! கை குழந்தைகளுடன் 2 பேரும் கதறல்! இறுதியில் நடந்த ட்விஸ்ட்!
இதற்காக தான் கார் டிரைவர் ஹரீஷை கூலிப்படை ஏவி கொன்றேன்! மஞ்சுளாவின் சினிமாவை மிஞ்சிய பரபரப்பு வாக்குமூலம்!