மயிலாப்பூர் தம்பதி கொலை வழக்கு... கொலையாளிகளுக்கு 5 நாட்கள் போலீஸ் காவல்!!

By Narendran SFirst Published May 13, 2022, 7:23 PM IST
Highlights

சென்னை மயிலாப்பூரில் ஸ்ரீகாந்த்- அனுராதா தம்பதியை கொலை செய்த கிருஷ்ணா, ரவி ராய் ஆகி இருவரையும் 5 நாட்கள் போலீஸ் காவலில் விசாரிக்க சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. 

சென்னை மயிலாப்பூரில் ஸ்ரீகாந்த்- அனுராதா தம்பதியை கொலை செய்த கிருஷ்ணா, ரவி ராய் ஆகி இருவரையும் 5 நாட்கள் போலீஸ் காவலில் விசாரிக்க சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. சென்னை மயிலாப்பூரில் வசித்து வந்த ஸ்ரீகாந்த்- அனுராதா தம்பதியினர் அமெரிக்காவில் உள்ள மகளை பார்த்துவிட்டு சென்னை திரும்பினர். அப்போது அவர்கள் கொலை செய்யப்பட்டனர். இதுக்குறித்து தகவலறிந்து வந்த காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது கொலையாளிகளை கண்டுபிடித்தனர். இதை அடுத்து அடையாளம் கண்ட போலீசார் நேபாளத்தைச் சேர்ந்த ஓட்டுநர் பதம் லால் கிருஷ்ணா, அவரது கூட்டாளி ரவிராய் ஆகியோரை ஆந்திர மாநிலம் ஓங்கோலில் வைத்து கைது செய்தனர். இருவரும் கொலை செய்ததை ஒப்புக் கொண்டு, புதைத்த இடத்தை அடையாளம் காட்டினர்.

 

அவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில் தொழில் அதிபர் ஸ்ரீகாந்துக்கு சொந்தமான கிழக்கு கடற்கரை சாலையில் நெமிலிச்சேரி பகுதியில் உள்ள சூலேரிகாட்டில் பிரமாண்ட பண்ணை வீட்டில், 2 பேரின் உடல்களையும் புதைத்தது தெரியவந்தது. பின்னர் காரை எடுத்துக் கொண்டு அங்கிருந்த தப்பி சென்று நேபாளம் செல்ல முன்றதும் தெரியவந்தது. இதை அடுத்து புதைக்கப்பட்ட உடல்களை தோண்டி எடுத்த போலீஸார் அதனை பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

 

பின்னர் கொலையாளிகளை கைது செய்து அவர்களிடம் இருந்து 1,127 சவரன் தங்க நகைகள், 2 வைர மூக்குத்திகள், வெள்ளி நகைகள், எலக்ட்ரானிக் பொருட்கள் மற்றும் கார் பறிமுதல் செய்யப்பட்டது. பின்னர், கொலையாளிகள் இருவரும் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு நீதிமன்ற காவலில் புழல் சிறையில் அடைக்கப்பட்டனர். இதனிடையே இரட்டை கொலை செய்த குற்றவாளிகளை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி மயிலாப்பூர் போலீஸார் சென்னை சைதாப்பேட்டி நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தனர். இந்த மனு மீதான விசாரணை இன்று சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் நடைபெற்றது. அப்போது, கொலை செய்த கிருஷ்ணா மற்றும் ரவி ராய் ஆகிய இருவரையும் 5 நாட்கள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி வழங்கி உத்தரவிட்டது. 

click me!