வீட்டு வாசலுக்கு சென்ற கழிவு நீர்; பக்கத்து வீட்டு பெண்ணை உலக்கையால் அடித்து கொன்றவர் கைது

By Velmurugan sFirst Published Feb 3, 2024, 2:47 PM IST
Highlights

திண்டுக்கல் மாவட்டத்தில் வாய் தகராறு முற்றிய நிலையில் பக்கத்து வீட்டு பெண்ணை உலக்கையால் அடித்து கொலை செய்த நபரை காவல் துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

திண்டுக்கல் மாவட்டம்  மட்டப்பாறை அருகே உள்ள சடையம்பட்டியைச் சேர்ந்த முத்துமாணிக்கம் மனைவி தமிழரசி (வயது 45). இவர் கூலித் தொழிலாளி ஆவார். இவருக்கும், இதே ஊரைச் சேர்ந்த அழகர் மகன் கருப்பையா (35). இருவரும் பக்கத்து வீட்டில் வசித்து வருகின்றனர். தமிழரசி வீட்டில் இருந்து சாக்கடை கழிவுநீர் கருப்பையா வீட்டு பக்கம் அடிக்கடி சென்றதாகக் கூறப்படுகிறது. 

பகலில் போலீஸ் வேலை, இரவில் செயின் பறிப்பு; பொள்ளாச்சியில் தலைமை காவலர் அதிரடி கைது

இதில் இவர்களுக்குள் ஏற்கனவே முன்விரோதம் ஏற்பட்டது. இந்நிலையில்  காலையில் இருந்து இரண்டு நபர்களும் அடிக்கடி வாய் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளனர். இந்த வாய் தகராறு முற்றவே வீட்டில் இருந்த உலக்கையை எடுத்து தமிழரசியின் தலையிலும், பல்வேறு இடங்களில் சரமாரியாக கருப்பையா தாக்கியுள்ளார். இதில் பலத்த காயமடைந்த தமிழரசி உடனடியாக மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு பின்னர் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு அனுமதிக்கப்பட்டார்.

பீகாரை விட பின் தங்கி உள்ளோமா? ஒரே மேடையில் விவாதிக்க தைரியம் உள்ளதா? அண்ணாமலைக்கு அமைச்சர் சவால்

ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்து போனார். இந்தப் படுகொலை குறித்து விளாம்பட்டி காவல்துறை ஆய்வாளர் ஷர்மிளா வழக்கு பதிவு செய்து  விசாரணை மேற்கொண்டு வருகின்றார். தப்பி ஓடிய கொலையாளியை காவல்துறையினர் தனிப்படை அமைத்து தீவிரமாக தேடி வந்த நிலையில் மதுரையில் பதுங்கி இருந்த கருப்பையாவை கைது செய்த காவல் துறையினர் நீதிபதி முன் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

click me!