திருத்தணி அருகே 17 வயது சிறுமியை காதலிப்பதாகக் கூறி கட்டாய திருமணம் செய்து, கர்ப்பமாக்கிய உறவினரை காவல் துறையினர் போக்சோ சட்டத்தில் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகே கூலி வேலை செய்து வருபவர் கருப்பு (பெயர் மாற்றப்பட்டுள்ளது) இவரது மகளுக்கு 17 வயதாகும் நிலையில். திருத்தணி முருகன் கோயிலுக்கு சென்று விட்டு வருவதாக கூறிவிட்டு சென்றவர் மீண்டும் வரவில்லை. இதனைத் தொடர்ந்து உறவினர்கள் வீடு மற்றும் பல்வேறு இடங்களில் தேடியும் 17 வயது இளம்பெண் காணவில்லை என்று அந்தப் பெண்ணின் தாய் திருத்தணி காவல் நிலையத்தில் 2023 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் புகார் அளித்திருந்தார்.
MGR குறித்து இழிவான பேச்சு; ஆ.ராசாவின் புகைப்படத்தை செருப்பால் அடித்து அதிமுகவினர் எதிர்ப்பு
undefined
இந்த புகாரை பதிவு செய்து கொண்டு இளம் பெண்ணை காணவில்லை என்று வழக்கு பதிவு செய்து இளம் பெண்ணை தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டிருந்தனர். அந்த இளம் பெண் ஆந்திர மாநிலத்தில் சித்தூர் பகுதியில் இருப்பதாக தகவல் கிடைத்தது. அதன்படி அந்த பகுதியில் சென்று அந்த இளம் பெண்ணுடன் இருந்த வாலிபரையும் பிடித்து வந்து திருத்தணி போலீசார் விசாரணை மேற்கொண்டதில் அந்த(17) வயது இளம்பெண் போலீசாரிடம் வாக்குமூலமாக கூறியதாவது, திருத்தணி அருகில் உள்ள வி.கே.என் கண்டிகை பகுதியைச் சேர்ந்த பாலாஜி (29) என்ற வாலிபர் வாலிபர் 17 வயது இளம் பெண்ணிற்கு சித்தப்பா முறை வருவதாகவும், இளம்பெண்ணை காதலிப்பதாகவும் கூறியுள்ளார்.
காட்டு யானையுடன் செல்பி; சுற்றுலா பயணியை தலைதெறிக்க ஓடவிட்ட ஒற்றை யானை - கேரளாவில் பரபரப்பு
இதற்கு 17 வயது இளம்பெண்ணும் காதலிப்பதாக கூறியதால் இருவரும் பள்ளிப்பட்டு வட்டம் கரிபேடு முருகன் கோயிலில் திருமணம் செய்து கொண்டு ஆந்திர மாநிலம் சித்தூர் பகுதியில் தனியாக வீடு வாடகைக்கு எடுத்து இருந்ததாகவும் அப்போது தன்னிடம் பாலாஜி வலுக்கட்டாயமாக பலமுறை உடலுறவு வைத்துக் கொண்டதாகவும் இதனால் தான் 5- மாத கர்ப்பிணியாக இருப்பதாகவும் 17 வயது இளம்பெண் காவல்துறை அதிகாரிகளிடம் வாக்குமூலம் அளித்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து இளம் பெண்ணை கடத்திச் சென்று ஏமாற்றி மிரட்டி உடலுறவு வைத்துக்கொண்டு கர்ப்பம் ஆக்கியதாக போலீசார் வழக்கு பதிவு செய்து பிடிபட்ட பாலாஜி மீது போஸ்கோ வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.