தனியாக இருந்த ஆண்டியை நிர்வாண வீடியோ எடுத்து.. பாலியல் பலாத்காரம் செய்த சைக்கோ இளைஞர் - அதிர்ச்சி!

Published : May 23, 2022, 05:38 PM IST
தனியாக இருந்த ஆண்டியை நிர்வாண வீடியோ எடுத்து.. பாலியல் பலாத்காரம் செய்த சைக்கோ இளைஞர் - அதிர்ச்சி!

சுருக்கம்

வெள்ளிக்கிழமை இரவு அந்த பெண் வேலை முடித்து வீட்டிற்குச் சென்ற நிலையில், வீட்டின் வெளியே அடையாளம் தெரியாத இளைஞர் ஒருவர் நின்று கொண்டிருப்பதைப் பார்த்து அவரிடம் யார் என கேட்டுள்ளார்.

சென்னை அடையாறை சேர்ந்த 43 வயது பெண் துப்பரவு தொழிலாளியாக ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வருகிறார். கடந்த 2009 ஆண்டு கணவரை இழந்த அவர் தனது மகள்களைத் திருமணம் முடித்துகொடுத்த நிலையில் வீட்டில் தனியாக வசித்து வந்துள்ளார். இந்நிலையில் வெள்ளிக்கிழமை இரவு அந்த பெண் வேலை முடித்து வீட்டிற்குச் சென்ற நிலையில், வீட்டின் வெளியே அடையாளம் தெரியாத இளைஞர் ஒருவர் நின்று கொண்டிருப்பதைப் பார்த்து அவரிடம் யார் என கேட்டுள்ளார்.

அப்போது, அந்த இளைஞர் அந்த பெண்ணின் வாயை மூடி வீட்டிற்குள் தள்ளி கத்தியை காட்டி கொலை செய்துவிடுவதாகக் கூறி அவரை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். மேலும் அவரை அரைநிர்வாணமாக நிற்க வைத்து வீடியோ எடுத்து கொண்டு, அந்த பெண்ணின் தொலைபேசி எண்ணை வாங்கி கொண்டு அங்கிருந்து சென்றுள்ளார். இதையடுத்து அவரது தொலைபேசிக்கு தொடர்பு கொண்டு இதுப்பற்றி யாரிடமோ அல்லது போலீசிடமோ எதுவும் சொல்லக்கூடாது எனவும், கூறினால் வீடியோவை வெளியிட்டு விடுவேன் எனவும் மிரட்டியுள்ளார். 

மேலும் தான் அழைக்கும் தனது ஆசைக்கு இணங்கவேண்டும் எனவும் மிரட்டியுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த பெண் தனது மகளிடம் இது குறித்து கூறியுள்ளார். இதைகேட்டு அதிர்ச்சியடைந்த அவர் அடையாறு அனைத்து மகளிர் போலீசாரிடம் புகார் அளித்த நிலையில் தனிப்படை போலிஸாரின் உதவியோடு மெரினா கடற்கரையில் இருந்த வாலிபரை கைது செய்தனர்.

பின்னர் போலீசார் விசாரணையில் திருவல்லிகேணி பகுதியை சேர்ந்த விஷால் , தந்தையை இழந்து இவர், கஞ்சா மற்றும் மதுபோதையில் தனியாக செல்லும் பெண்களை குறிவைத்து பாலியியல் சீண்டலில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது. இதையடுத்து கைது செய்யப்பட்ட விஷாலிடம் இது போன்று எத்தனை பெண்களிடம் நடந்து கொண்டுள்ளார் என்று அனைத்து மகளிர் போலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதையும் படிங்க : "எதுவா இருந்தாலும் பார்த்துக்கலாம்.. அடிச்சு தூக்குங்க.!" அதிமுகவினருக்கு எஸ்.பி வேலுமணி போட்ட ஆர்டர் !

இதையும் படிங்க : தமிழகத்தில் மீண்டும் பேருந்து கட்டணம் உயர்வா..? அமைச்சர் சொன்ன 'அதிர்ச்சி' தகவல் !

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

அரைகுறை ஆடையுடன் அமர்ந்திருந்த ஸ்ரேயா! கதறியும் விடாத தந்தை, மகன்! இறுதியில் நடந்த அதிர்ச்சி!
திருமணமான பெண்ணுடன் பழகுவதை நிறுத்திடு! கண்டித்த வேல்குமார்! நடுரோட்டில் கதறவிட்ட அதிர்ச்சி!