குழந்தையின் உடலில் சிகரெட்டால் சூடு வைத்தேன்...வயிற்றில் எட்டி உதைத்தேன்... கற்பழித்து கொன்ற 2 வது கணவனின் பகீர் வாக்குமூலம்

Published : Sep 11, 2019, 01:13 PM IST
குழந்தையின் உடலில் சிகரெட்டால் சூடு வைத்தேன்...வயிற்றில் எட்டி உதைத்தேன்... கற்பழித்து கொன்ற 2 வது கணவனின் பகீர் வாக்குமூலம்

சுருக்கம்

4 வயது பெண் குழந்தையை பாலியல் பலாத்காரம் செய்து சித்ரவதைப்படுத்தி கொலை செய்ததாக 2 வது கணவன் வாக்குமூலம் அளித்த சம்பவம்  பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

4 வயது பெண் குழந்தையை பாலியல் பலாத்காரம் செய்து சித்ரவதைப்படுத்தி கொலை செய்ததாக 2 வது கணவன் வாக்குமூலம் அளித்த சம்பவம்  பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை வியாசர்பாடியை சேர்ந்த ரமேஷ் என்பவர் பவானி என்ற இளம்பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டு  2குழந்தைகளுடன் கொடுங்கையூரில் வசித்து வந்துள்ளார். இவர் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு கருத்து வேறுபாடு காரணமாக ரமேஷை விட்டு பிரிந்த மனைவி பவானி அதே பகுதியை சேர்ந்த ஆசிப் என்ற இளைஞரை 2 வதாக கல்யாணம்  செய்து கொண்டு புழல் கண்ணப்பசாமி நகரில் வசித்துள்ளார். இந்த நிலையில் தனது 4 வயது மகள் யாழினிக்கு திடீரென மூச்சு திணறல் ஏற்பட்டதாக சொல்லி தனியார் மருத்துவமனைக்கு பவானி கொண்டுச் சென்றுள்ளார். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் குழந்தை ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.

இந்த தகவலறிந்த அறிந்த முதல் கணவர் ரமேஷ் தனது குழந்தையின் முதுகு, கழுத்து, மற்றும் வயிறு பகுதிகளில் காயங்கள் இருப்பதால் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளதாக போலீசில் புகார் அளித்துள்ளார். இதனால் பவானியின் 2வது கணவர் ஆசிஃபை பிடித்து போலீசார் தீவிரமாக விசாரித்து வந்ததில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது. 

போலீசார் நடத்திய விசாரணையில் அளித்த வாக்குமூலத்தில்; 4 வயது குழந்தை யாழினியை உடலில் சிகரெட்டால் சூடு வைத்தும் அடிவயிறு, கன்னம், முதுகு ஆகிய பகுதிகளில் பலமாக ஜல்லி கரண்டியால் அடித்தும் குழந்தையை கொலைவெறியில் வயிற்றில் எட்டி உதைத்தும்  கொன்றதாக ஆசிப் தனது வாக்குமூலத்தில் கூறியுள்ளது போலீசாரையே அதிர்ச்சியில்ஆழ்த்தியுள்ளது.

ஆசிஃப் மீது மணலி, கொடுங்கையூர் ஆகிய போலீஸ் ஸ்டேஷனில் வழிப்பறி ,கஞ்சா விற்பது உள்ளிட்ட பல கேஸ் நிலுவையில் உள்ளது என போலீசார் தெரிவித்துள்ளனர். இதனை தொடர்ந்து ஆசிப் மீது குழந்தையை கற்பழித்தது மற்றும் கொலை செய்த நோக்கத்தோடு அடித்து துன்புறுத்துவது ஆகிய பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

PREV
click me!

Recommended Stories

பயங்கரவாத தாக்குதல் நடத்த சதி... லஷ்கர்-இ-தொய்பா பயங்கர ஸ்கெட்ச்..! டெல்லியில் பரபரப்பு..!
சகோதரியை கண்டித்த ஆசிரியர்..! பள்ளியில் துப்பாக்கிச் சூட்டில் 22 குழந்தைகள் பலி..! பணயக் கைதிகளான ஆசிரியர்கள்..!