உல்லாசமாக இருந்தோம், காசு கேட்டாள் அதான் கொன்று கரும்பு தோட்டத்தில் வீசிவிட்டேன்!! கள்ளக்காதலன் கூல் வாக்கு மூலம்

Published : Sep 11, 2019, 10:38 AM ISTUpdated : Sep 11, 2019, 10:39 AM IST
உல்லாசமாக இருந்தோம், காசு கேட்டாள் அதான் கொன்று கரும்பு தோட்டத்தில் வீசிவிட்டேன்!! கள்ளக்காதலன் கூல் வாக்கு மூலம்

சுருக்கம்

கொடுத்த பணத்தை திருப்பி கேட்ட கள்ளக்காதலியை, அடித்தே கொன்றுள்ளார் அந்த பெண்ணின் கள்ளக்காதலன்.

கொடுத்த பணத்தை திருப்பி கேட்ட கள்ளக்காதலியை, அடித்தே கொன்றுள்ளார் அந்த பெண்ணின் கள்ளக்காதலன்.

திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு அருகே உள்ள கீழ்சிறுபாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் பாண்டுரங்கன். அவருடைய மனைவி ராஜேஸ்வரி , கடந்த 29-ந் தேதி திடீரென மாயமானார். தனது மனைவி எங்கே போனார் என தனது உறவினர்கள் மாமியார் வீட்டிர்க்கெல்லாம் போன் போட்டு கேட்டுள்ளார். அவருக்கு தெரிந்த இடத்திலெல்லாம் தேடியுள்ளார் ஆனால் அவர் எங்கு இருக்கிறார் என தெரியவில்லை, இதனையடுத்து 

தண்டராம்பட்டு போலீசில் தனது மனைவி காணவில்லை என புகார் அளித்துள்ளார். வழக்குப்பதிவு செய்த போலீசார் ராஜேஸ்வரியை தேடி வந்தனர். இதற்கிடையில் ராதாபுரம் கிராமத்தில் உள்ள ஏழுமலை என்பவரது நிலத்தில் ராஜேஸ்வரி பிணமாக கிடந்தார். தகவல் கிடைத்ததும் விரைந்து சென்ற போலீசார் திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார், தீவிரமாக விசாரித்ததில்  திருவண்ணாமலை அவலூர்பேட்டை ரோட்டில் வசித்து வரும் சமையல் மாஸ்டர் அஜித் முகமது என்பவர் ராஜேஸ்வரியை கொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர்.

அப்போது போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில்; எனக்கும், ராஜேஸ்வரிக்கும் கடந்த 5 ஆண்டுகளாக பழக்கம் இருந்தது. பின்னர் நாளடைவில் நெருக்கமாகி கள்ளக்காதலாக மாறியது. இதனால் நாங்கள் இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்தோம். இந்த நிலையில் சம்பவத்தன்று என்னை உல்லாசமாக இருந்தோம் அதன் பிறகு, நாங்க இருவரும் சேர்ந்து மது குடித்து கொண்டிருந்தோம். அப்போது ராஜேஸ்வரி, எனக்கு கொடுத்த ரூ.40 ஆயிரம் பணத்தை திருப்பி கேட்டார். இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

அப்போது, மதுபோதையில் இருந்த எனக்கு ஆத்திரம் வரவே நான் கையால் தாக்கியதில் ராஜேஸ்வரி சம்பவ இடத்திலேயே மயங்கி விழுந்தார். சிறிது நேரம் கழித்து பார்த்ததும் தான் அவர் இறந்தது தெரிந்தது, இதனால் பயந்து போன நான் பிணத்தை கரும்பு தோட்டத்தில் வீசிவிட்டு அங்கிருந்து ஓடிவிட்டேன் எனக் கூறினார்.

PREV
click me!

Recommended Stories

அங்கிள் இப்படியெல்லாம் செய்யாதீங்க ரொம்ப தப்பு.. கதறிய 12 வயது சிறுமி.. விடாத கொடூரன்.!
கண் விழித்து பார்த்த மருத்துவ மாணவி.! சிதறி கிடந்த ஆடைகள்.! ஒரு வேகத்தில் அப்படி செஞ்சுட்டேன்.! டாக்டர் கதறல்