சென்னை புறநகரில் பகுதியில் பம்மல் ஆதாம் நகர் முதல் தெருவை சேர்ந்தவர் சின்னப்பொன்னன் (80). இவர் ஆடுகளை வளர்த்து வருகிறார். இந்நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன், பட்டப்பகலில் தனது வீட்டின் அருகே ஆடுகளை கயிற்றில் கட்டிப் போட்டு இருந்த ஆடுகள் மாயமானதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
சென்னை பல்லாவரம் அருகே கடந்த 6 மாதங்களில் ஆயிரக்கணக்கான ஆடுகளை திருடி கார் வாங்கி உல்லாச வாழ்க்கை வாழ்ந்த வந்த பெண் உள்ளிட்ட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சென்னை புறநகரில் பகுதியில் பம்மல் ஆதாம் நகர் முதல் தெருவை சேர்ந்தவர் சின்னப்பொன்னன் (80). இவர் ஆடுகளை வளர்த்து வருகிறார். இந்நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன், பட்டப்பகலில் தனது வீட்டின் அருகே ஆடுகளை கயிற்றில் கட்டிப் போட்டு இருந்த ஆடுகள் மாயமானதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதை தொடர்ந்து, அப்பகுதிகளில் பொருத்தப்பட்டு இருந்த சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்த போது அதில் சிவப்பு நிறம் கொண்ட காரில் வந்த பெண் உள்ளிட்ட இரண்டு பேர் திருடி செல்லும் காட்சிகள் இடம் பெற்றிருந்தன. இது தொடர்பாக சங்கர் நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
இதனிடையே, மீதமுள்ள ஆடுகளையும் திருடுவதற்காக கடந்த சில நாட்களுக்கு முன் அதே கும்பல் வந்து ஆடுகளை திருட முயன்ற போது இதை பார்த்த சின்னப் பொன்னன் கூச்சலிடவே அந்த கும்பல் அங்கிருந்து தப்பியது. இதனையடுத்து, கார் பதிவு எண்ணை வைத்து போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தினர். அப்போது, அனகாபுத்தூரில் உள்ள மெக்கானிக் கடையில் ஆடு திருடி சென்ற கார் நின்றிருந்தது. இந்த கார் யாருடையது என்பது குறித்து விசாரித்த போது அனகாபுத்தூரை சேர்ந்த ஜெயக்குமார் என்பவருக்கு சொந்தமானது என தெரியவந்தது. மேலும், அவர் தாம்பரம் அடுத்த முடிச்சூரை சேர்ந்த சரோஜினி என்ற பெண்ணுடன் இணைந்து ஆடுகளை திருடியதும் அவற்றை மதுரவாயலில் உள்ள கறிக்கடை உரிமையாளர் பாரூக் என்பவரிடம் விற்றதும் தெரியவந்தது. இதனையடுத்து, கறிக்கடை உரிமையாளர், சரோஜினி உள்ளிட்ட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பல அதிர்ச்சி தகவல் வெளியானது. மதுரவாயல் பகுதியில் கறிக்கடை வைத்திருக்கும் பாரூக் பாலியல் தொழில் செய்யும் பெண்களிடம் உல்லாசமாக இருப்பதை வழக்கமாக கொண்டுள்ளார். அப்போது, சரோஜினியுடன் பழக்கம் ஏற்பட்டு அடிக்கடி தனிமையில் உல்லாசமாக அனுபவித்து வந்துள்ளார். அப்போது தான் சீக்கிரம் பணக்காரர் ஆக வேண்டும் என்ற எண்ணத்தில் பரூக் கொடுத்த ஐடியா பேரில் சரோஜினி இதுபோன்ற செயலில் ஈடுபட்டது தெதரியவந்தது. இதனையடுத்து, 3 பேரும் நீதிமன்றதத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.