வீடு புகுந்து பெண் வெட்டி படுகொலை.. நகைக்காக கொலையா? வேறு ஏதேனும் காரணமா?

By vinoth kumar  |  First Published Jan 12, 2023, 8:17 AM IST

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே உள்ள கண்ணங்கோட்டை பகுதியில் வசித்து வருபவர் குமார். இவரது மனைவி வேலுமதி (35). இவரது கணவர் வெளிநாட்டில் இருப்பதால் மகன் மூவரசனுடன் வேலுமதி அவரது தாயார் கனகம் வீட்டில் வசித்து வந்துள்ளார்.


சிவகங்கை அருகே அதிகாலை வீட்டிற்குள் புகுந்த கும்பல் பெண்ணை வெட்டி கொலை செய்துவிட்டு நகையை கொள்ளையடித்து சென்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே உள்ள கண்ணங்கோட்டை பகுதியில் வசித்து வருபவர் குமார். இவரது மனைவி வேலுமதி (35). இவரது கணவர் வெளிநாட்டில் இருப்பதால் மகன் மூவரசனுடன் வேலுமதி அவரது தாயார் கனகம் வீட்டில் வசித்து வந்துள்ளார். இந்நிலையில், நேற்று அதிகாலை கனகத்தின் வீட்டிற்குள் புகுந்த மர்ம நபர்கள் வேலுமதியை அரிவாளால் சரமாரியாக வெட்டியதுடன் அதை தடுக்க முயன்ற அவரின் தாய் மற்றும் மகனையும் வெட்டிவிட்டு பீரோவில் இருந்த நகைகளை கொள்ளையடித்து சென்றனர். 

Tap to resize

Latest Videos

இதையும் படிங்க;- முனகல் சத்தம்.. அரை நிர்வாணத்தில் அண்ணியுடன் உல்லாசம்.. நேரில் பார்த்த கொழுந்தன் என்ன செய்தார் தெரியுமா?

நீண்ட நேரமாகியும் கனகா வீடு திறக்கப்படாததால் சந்தேகமடைந்த அக்கம் பக்கத்தினர் சென்று பார்த்த போது 3 பேரும் ரத்த வெள்ளத்தில் இருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக உடனே போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக்கொண்டிருந்த கனகம் அம்மாளும், பேரன் மூவரசும் தேவகோட்டை அரசு மருத்துவமனையில் அனுப்பி வைக்கப்பட்டனர். இதில், உயிரிழந்த வேலுமதி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

தப்பிச்சென்ற கொலையாளிகள் வீட்டை சுற்றி மிளகாய் பொடியை தூவி விட்டு சென்றதும் தெரியவந்தது. கொள்ளை சம்பவத்திற்காக இந்த கொலை நடந்ததா அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என்று காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 

இதையும் படிங்க;-  எனக்கு இன்னும் அடங்கல! ஒன்ஸ்மோர் கேட்ட கள்ளக்காதலன்! மறுத்த கள்ளக்காதலி! இறுதியில் காட்டில் நடந்தது என்ன?

click me!