வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் அடுத்த பி.என்.பாளையம் ஊராட்சி புதூர் கொல்லைமேடு பகுதியை சேர்ந்தவர் நாகேஷ்(41). பால் வியாபாரம் செய்து வருகிறது. திமுக கிளை செயலாளராக உள்ளார். இவருக்கு கிரிஜா (37) என்ற மனைவியும், ஹரினி (17) என்ற மகளும், விஜயகுமார் (13) என்ற மகனும் உள்ளனர்.
தொழில் போட்டி காரணமாக பால் வியாபாரி வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் அடுத்த பி.என்.பாளையம் ஊராட்சி புதூர் கொல்லைமேடு பகுதியை சேர்ந்தவர் நாகேஷ்(41). பால் வியாபாரம் செய்து வருகிறது. திமுக கிளை செயலாளராக உள்ளார். இவருக்கு கிரிஜா (37) என்ற மனைவியும், ஹரினி (17) என்ற மகளும், விஜயகுமார் (13) என்ற மகனும் உள்ளனர். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு நாகேஷ் பால் கொள்முதல் நிலையத்தை மூடிவிட்டு வீட்டுக்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவரை பயங்கர ஆயுதங்களுடன் வழிமறித்த மர்ம கும்பல் அவரை சரமாரி வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பினர். ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக்கொண்டிருந்த நாகேஷை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதையும் படிங்க;- சென்னையில் மஜாவாக நடைபெற்ற விபச்சாரம்! அரைகுறை ஆடைகளில் 2 இளம்பெண்கள்.. ஒரு மணிநேரத்திற்கு எவ்வளவு தெரியுமா?
அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக கூறியுள்ளனர். இந்த சம்பவம் குறித்து லத்தேரி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் அவரை உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதையும் படிங்க;- மைத்துனியை மடக்க நினைத்த தங்கையின் கணவர்.. உல்லாசத்துக்கு வர மறுத்ததால் நடுரோட்டிலே கதறவிட்ட சம்பவம்..!
இந்த கொலை தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில் நாகேஷ் பால் லிட்டர் ரூ.26க்கு கொள்முதல் செய்ததும், அதே பகுதியில் வீடு வீடாக 15 ஆண்டுகளாக பால் கொள்முதல் செய்யும் மற்றொரு பால் வியாபாரி லிட்டர் ரூ.23க்கு கொள்முதல் செய்ததும் தெரியவந்தது. இதனால் பலர் நாகேஷிடம் பால் விற்றுள்ளனர். இதனால், இருவருக்கும் தகராறு நிலவி வந்துள்ளது. இதுதொடர்பாக ஏற்பட்ட தொழில்போட்டியில் கொலை நடந்திருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். இந்த சம்பவம் தொடர்பாக 4 பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.