கஞ்சா வியாபாரிகளின் 2000 வங்கி கணக்குகள் முடக்கம்..! காவல்துறை அதிரடி நடவடிக்கை

By Ajmal KhanFirst Published Oct 4, 2022, 12:29 PM IST
Highlights

ஆபரேஷன் கஞ்சா வேட்டையில் மொத்தமாக தமிழகம் முழுவதும் உள்ள கஞ்சா வியாபாரிகளின் 2000 வங்கி கணக்குகள் முடக்கம் செய்து காவல்துறை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது

ஆப்ரேஷன் கஞ்சா 2.O

தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் போதைப் பொருட்களின் விநியோகம் நடைபெறுவதாக புகார் வந்தது. இதனையடுத்து தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கஞ்சா உள்ளிட்ட பொருட்களை ஒழிக்க காவல்துறை தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டார். இதனையடுத்து மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர்கள் கூட்டமும் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பொதைப்பொருட்களை ஒழிக்க கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டது.   இதனையடுத்து தமிழகத்தில் போதைப் பொருள் நடமாட்டத்தை கட்டுக்குள் கொண்டுவர கடந்தாண்டு டிசம்பர் மாதத்தில் இருந்து ஆபரேஷன் கஞ்சா வேட்டை என்ற பெயரில் கஞ்சா கடத்தல் மற்றும் பயன்பாட்டுக்கு எதிரான சோதனை நடத்தப்பட்டது. இந்த சோதனையில் நூற்றுக்கும் மேற்பட்ட கஞ்சா வியாபாரிகள் கைது செய்யப்பட்டனர். வழக்கும் பதிவு செய்யப்பட்டது.

10 வருடங்களில் கருப்பு, நீல நிற சட்டை அணிய முடியாத நிலை வரலாம்...!ஆர்எஸ்எஸ்க்கு எதிராக அலறும் திருமாவளவன்

2000 வங்கி கணக்கு முடக்கம்

தமிழக டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவின் பேரில் இந்த வேட்டை நடத்தப்பட்டது அதன் பின்பாக ஆபரேஷன் கஞ்சா வேட்டை 2.0 என்ற சோதனை இந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் ஏப்ரல் மாதம் வரை நடத்தப்பட்டது. இந்த இரண்டு சோதனைகளின் முடிவுகளில் ஏராளமான கஞ்சா வியாபாரிகள் மீது  வழக்கு பதிவு செய்யப்பட்டது அவர்களுக்கு சொந்தமான 2000 வங்கி கணக்கில் இருந்து சுமார் 50 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்கள் மற்றும் பணம் ஆகியவற்றை தமிழக போலீசார் முடக்கி உள்ளனர்.

இதையும் படியுங்கள்

மணிரத்திரனத்தின் படத்தால் தூக்கத்தை இழந்தேன்..! திமுக எம்.பி திருச்சி சிவா பதிவால் நடிகர்கள் அதிர்ச்சி

click me!