ஆவடி அருகே 20 பவுன் தங்க நகை கொள்ளை… பூட்டை உடைத்து மர்ம நபர்கள் கைவரிசை!!

Published : Aug 30, 2022, 04:49 PM IST
ஆவடி அருகே 20 பவுன் தங்க நகை கொள்ளை… பூட்டை உடைத்து மர்ம நபர்கள் கைவரிசை!!

சுருக்கம்

ஆவடி அருகே வீட்டின் பூட்டை உடைத்து 20 பவுன் நகை மற்றும் ரூ.3 லட்சம் பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆவடி அருகே வீட்டின் பூட்டை உடைத்து 20 பவுன் நகை மற்றும் ரூ.3 லட்சம் பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை ஆவடியை அடுத்த பட்டாபிராம் வெங்கடேஸ்வரா நகர் டிரைவர்ஸ் காலனியை சேர்ந்தவர் கீர்த்திராஜ். 21 வயதான இவர், தனது தாயார் தனம் மற்றும் அக்கா சங்கீதா ஆகியோருடன் வசித்து வருகிறார். இந்த நிலையில் இவர் தனது குடும்பத்துடன் வீட்டை பூட்டிவிட்டு மணலியில் உள்ள அவரது பெரியம்மா வீட்டிற்கு சென்றுள்ளார்.

இதையும் படிங்க: ரத்த வெள்ளத்தில் கிடந்த காதல் மனைவி.. கண்ணெதிரே தூக்கில் தொங்கிய கணவர்.. நடந்தது என்ன? பரபரப்பு தகவல்.!

இதை அறிந்த மர்ம நபர்கள் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்துள்ளனர். பின்னர் உள்ளே இருந்த பீரோவை உடைத்து அதில் இருந்த 20 பவுன் நகை மற்றும் ரூ.3 லட்சம் பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றுள்ளனர். ஊரிலிருந்து வீடு திரும்பிய கீர்த்திராஜ் வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்.

இதையும் படிங்க: முதல்வர் கான்வாய் முன்பு பைக்கில் ஸ்டண்ட் செய்த இளைஞர்.. மடக்கி பிடித்து சரியான ஆப்பு வைத்த போலீஸ்..!

பின்னர் இது குறித்து ஆவடி குற்றப்பிரிவு போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டதை அடுத்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதேபோல் செங்குன்றத்தை அடுத்த பள்ளிகுப்பத்தை சேர்ந்த ஜெகநாதன் என்பவரது வீட்டின் பூட்டை உடைத்து 12 பவுன் நகை, ரூ.5 ஆயிரம் மற்றும் ஒரு கிலோ வெள்ளி பொருட்களை மர்மநபர்கள் கொள்ளையடித்துள்ளனர். இதுக்குறித்து தகவலறிந்த செங்குன்றம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

பயங்கரவாத தாக்குதல் நடத்த சதி... லஷ்கர்-இ-தொய்பா பயங்கர ஸ்கெட்ச்..! டெல்லியில் பரபரப்பு..!
சகோதரியை கண்டித்த ஆசிரியர்..! பள்ளியில் துப்பாக்கிச் சூட்டில் 22 குழந்தைகள் பலி..! பணயக் கைதிகளான ஆசிரியர்கள்..!