அருப்பக்கோட்டை காட்டு பகுதியில் கேட்ட இளம் பெண்களின் அலறல் சத்தம்; காமுகன்கள் வெறிச்செயல்

By Velmurugan s  |  First Published Mar 20, 2024, 10:36 AM IST

அருப்புக்கோட்டை அருகே இளம் பெண்கள் இருவரை ஏமாற்றி காட்டுப் பகுதிக்கு அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்த 5 நபர்களை காவல் துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.


விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே காட்டுப் பகுதியில் அக்காள், தங்கை என இரு இளம் பெண்கள் 5 பேர் கொண்ட கும்பலால் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப் பட்டுள்ளனர். இது தொடர்பாக அருப்புக்கோட்டை டவுன் காவல் நிலையத்தில் இளம் பெண் அளித்த புகார் மனுவில், நானும், எனது தங்கையும் எங்கள் பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் பனியன் நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வருகிறோம்.

பணம் வாங்குவதற்காக எனது தங்கை வீட்டிற்குச் சென்றிருந்தேன். அப்போது எங்களுக்கு ஏற்கனவே அறிமுகமான ராஜ்குமார் என்பவர் பதற்றத்தோடு வங்து, உங்கள் மாமா விபத்தில் சிக்கி காயமடைந்து கிடப்பதாகக் கூறி எங்களை அழைத்தார். அதனை நம்பி நானும், எனது தங்கையும் அவருடன் இருசக்கர வாகனத்தில் சென்றோம். இருசக்கர வாகனம் காட்டு பகுதி வழியாக சென்ற நிலையில் அங்கு மறைந்திருந்த 4 பேர் திடீரென இருசக்கர வாகனத்தை நிறுத்தினர்.

Tap to resize

Latest Videos

undefined

மக்களவை தேர்தலுக்கான திமுக தேர்தல் அறிக்கையை வெளியிட்டார் ஸ்டாலின்.. முக்கிய அம்சங்கள் என்னென்ன?

மேலும் எங்களோடு வந்த ராஜ்குமாரை 4 பேரும் சேர்ந்து தாக்கினர். பின்னர் எங்கள் இருவரையும் மிரட்டி, கட்டாயப்படுத்தி 4 பேரும் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ததாக அந்த புகாரில் குறிப்பிடப்பட்டு உள்ளது. இதனைத் தொடர்ந்து புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்த காவல் துறைியனர் இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டனர். காவல் துறையினர் நடத்திய முதல்கட்ட விசாரணையில், இளம் பெண்கள் இருவரையும் அழைத்துச் சென்ற ராஜ்குமார், குற்றச்செயலில் ஈடுபட்ட 4 பேரின் கூட்டாளி என்பதை காவல் துறையினர் உறுதி செய்துள்ளனர்.

தேமுதிக,புதிய தமிழகம், எஸ்டிபிஐக்கு தொகுதியை ஒதுக்கிய அதிமுக.? எத்தனை இடம் .? எந்த தொகுதி தெரியுமா.?

இதனைத் தொடர்ந்து பொய் கூறி இளம் பெண்களை அழைத்துச் சென்ற ராஜ்குமார், பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட சுந்தரமகாலிங்கம், கனி, பாலு, ராஜ்குமார் என 5 நபர்களையும் தீவிரமாக தேடி வருகின்றனர். மேலும் பாதிப்புக்கு உள்ளான இளம் பெண்கள் இருவரும் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு உள்ளனர்.

click me!