சொத்து தகராறு; கூட்டாளியோடு சேர்ந்து சகோதனை போட்டு தள்ளிய தம்பி கைது - சேலத்தில் பரபரப்பு

By Velmurugan s  |  First Published Mar 19, 2024, 12:36 PM IST

சேலத்தில் சொத்து தகராறில் கூட்டாளியோடு சேர்ந்து அண்ணனை கொலை செய்த தம்பியை காவல் துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

2 person arrested who killed her own brother in salem district vel

சேலம் மாவட்டம், கெங்கவல்லி அருகே, தெடாவூர் பேரூராட்சி, மணக்காடு பகுதியைச் சேர்ந்த, மாணிக்கம் மகன் அருணாச்சலம் (வயது 53). இவருக்கும், அவரது தம்பி காசி (48), என்பவருக்கும் இடையே சொத்து தொடர்பாக பிரச்சினை இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது. இதனிடையே கடந்த சில தினங்களுக்கு முன், விவசாயத் தோட்டத்தில் கொட்டகை அமைத்த காசி, அதற்காக மின் இணைப்பு கேட்டு மின்வாரிய அலுவலகத்தில் மனு செய்தார். 

எங்கள் சாதி பெண்கள் மீது கை வைத்தால் கருவறுப்போம்; இணையத்தில் வைரலாகும் கொமதே கட்சி வேட்பாளரின் அணவ பேச்சு

Tap to resize

Latest Videos

மின் இணைப்பு வழங்குவதற்கு, அண்ணன் அருணாச்சலம் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இந்நிலையில் கடந்த, 14ம் தேதி, இப்பிரச்னை தொடர்பாக, அண்ணன், தம்பி இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இதில், ஆத்திரம் அடைந்த தம்பி காசி, அண்ணன் அருணாச்சலத்தை கத்தியால் குத்தியுள்ளார். அதேபோல், காசியின் உறவினர் பீமனும் தாக்கியுள்ளார்.

காஞ்சியில் பலகோடி மதிப்புள்ள தங்க நகைகள் பறிமுதல்; பறக்கும் படை அதிகாரிகள் நடவடிக்கை

இதில் படுகாயமடைந்த அருணாச்சலம், ஆத்தூர் அரசு மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டார். பின், மேல்சிகிச்சைக்கு சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தீவிர சிகிச்சை பிரிவில் இருந்து அருணாச்சலம் சிகிச்சை பலன் இன்றி நேற்று உயிரிழந்தார். இதுகுறித்து, கெங்கவல்லி போலீசார், தம்பி காசி, உறவினர் பீமன் ஆகியோர் மீது, கொலை வழக்கு பதிவு செய்து, நேற்று, அவர்களை கைது செய்து, சிறையில் அடைத்தனர்.

vuukle one pixel image
click me!
vuukle one pixel image