மச்சினியை வளைத்துபோட நினைத்து வசமாக சிக்கிய காதல் கணவன்; சேலத்தில் பரபரப்பு

By Velmurugan s  |  First Published Mar 25, 2024, 2:25 PM IST

சேலத்தில் காதல் கணவன் மீது இளம் பெண்ணும், அவரது தங்கையும் புகார் அளித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


சேலம் மாவட்டம் தாரமங்கலம் அடுத்த பெரியசோகை பகுதியைச் சேர்ந்தவர் சுரேஷ்குமார் (வயது 30). இவர் அதே பகுதியைச் சேர்ந்த பெண்ணை கடந்த 5 வருடங்களுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்துள்ளார். இவர்களது திருமணத்திற்கு இரு வீட்டாரும் கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், அதனையும் மீறி திருமணம் செய்துள்ளனர். காதல் திருமண வாழ்க்கை முதல் 4 ஆண்டுகள் சந்தோஷமாக கடந்து சென்றுள்ளது.

ஆனால், கடந்த ஓராண்டாக சுரேஷ் குமார், தனது காதல் மனைவியிடம் வரதட்சனை கேட்டு கொடுமை படுத்தியதாகக் கூறப்படுகிறது. ஒரு கட்டத்தில் சுரேஷ்குமார் தனது மனைவியை அடித்து கொடுமை படுத்தத் தொடங்கி உள்ளார். இதனிடையே காதல் மனைவியின் தங்கையான 21 வயது இளம் பெண், தனது அக்காவை பார்ப்பதற்காக சுரேஷ்குமாரின் வீட்டிற்கு அடிக்கடி வந்துள்ளார்.

Tap to resize

Latest Videos

undefined

பங்குனி உத்திரம்; அண்ணாமலையார் ஆலயத்தில் வெகு விமரிசையாக நடைபெற்ற திருக்கல்யாண வைபவம்

அவ்வபோது வீட்டிற்கு வரும் மனைவியின் தங்கையை சுரேஷ்குமார் கட்டாயப்படுத்தி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். மேலும் இதனை வீடியோவாக பதிவு செய்து, அப்பெண்ணை மிரட்டி அவ்வபோது தனது ஆசைக்கு இணங்கச் செய்துள்ளார். மேலும் காதல் திருமணம் செய்து கொண்ட சுரேஷ் குமாருக்கும், அவரது மனைவிக்கும் கடந்த 5 ஆண்டுகளாக குழந்தை இல்லாததை சுட்டிக் காட்டிய சுரேஷ் குமார், உனது தங்கையை எனக்கு திருமணம் செய்து வைக்க வேண்டும் என கூறி கட்டாயப்படுத்தி உள்ளார்.

புதுவைக்கு ஒரு மத்திய அமைச்சர் வேண்டும் என நாம் உரிமையுடன் கேட்க வேண்டும்; அதற்கு நமசிவாயம் வெற்றி பெற வேண்டும் - முதல்வர் ரங்கசாமி

இதற்கு மனைவி எதிர்ப்பு தெரிவிக்கவே அவரை சுரேஷ் குமார் அடித்து வீட்டை விட்டு வெளியே துரத்தியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த இளம் பெண்கள் இருவரும் இது தொடர்பாக ஓமலூர் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். புகார் அளிக்கப்பட்டதை அறிந்த சுரேஷ் குமார் உடனடியாக தலைமறைவானார். அவரது செல்போன் எண் மூலம் காவல்துறை அதிகாரிகள் சுரேஷ் குமாரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். மேலும் இது தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது.

click me!