சிகிச்சையில் உள்ள காதலனுக்கு 2 காதலிகள்.. அவரது காதலிக்கு 3 காதலன்கள்... கையும் களவுமாக சிக்க வைத்த கொரோனா..!

Published : Apr 25, 2020, 04:09 PM IST
சிகிச்சையில் உள்ள காதலனுக்கு 2 காதலிகள்.. அவரது காதலிக்கு 3 காதலன்கள்... கையும் களவுமாக சிக்க வைத்த கொரோனா..!

சுருக்கம்

 இருவரும் யார் யாருடன் தொடர்பில்  இருந்தார்கள் என போலீஸ் விசாரித்ததில் அந்த காதலிக்கு மேலும் 3 காதலன்கள் இருப்பது தெரிந்து அவர்களும் தனிமைப்படுத்தப்பட்டனர். 

கொரோனா தொற்று பலருக்கும் பல வகையான பாடங்களை வாழ்க்கையில் கற்றுக் கொடுத்துள்ளது. மரண பீதிக்கு முன் எல்லாமே சாதாரணம் என உணர்ந்து எளிய வாழ்க்கைக்கு பலரும் திரும்பி இருக்க, கொரோனா குஸ்தியிலும் பலரது சேட்டைகள் அடங்கவே இல்லை. 

அடங்காமல் ஊர் சுற்றுவது, போதைக்காக மாற்றுவழி தேடுவது என பலரும் தங்களை திருத்திக் கொள்ள முன் வராத நிலையில், கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள காதலனுக்குப் இரண்டு காதலிகளும், அவரது காதலிக்கு 3 காதலன்களும் இருப்பது தெரிய வந்து அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

டெல்லியில்  காதலனுக்கும் அவரது காதலிக்கும் கொரோனா தொற்றுக்கு உள்ளது உறுதி படுத்தப்பட்டுள்ளது.  அவர்கள் இருவரும் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் கூத்து என்னவென்றால், அவர்கள் இருவரும் யார் யாருடன் தொடர்பில்  இருந்தார்கள் என போலீஸ் விசாரித்ததில் அந்த காதலிக்கு மேலும் 3 காதலன்கள் இருப்பது தெரிந்து அவர்களும் தனிமைப்படுத்தப்பட்டனர். 

அந்த மூன்று காதலன்களில் ஒருவருக்கு 2 காதலிகள் இருப்பது தெரியவந்துள்ளது. அந்த 2 காதலிகளில் ஒருவரின் போனில் நிறைய ஆண்கள் அழைப்புகள் இருப்பதால் இந்த வழக்கு சிபிசிஐடி.க்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த சம்பவம் கொரோனாவை விட பயங்கரமாக உள்ளது என போலீசார் வட்டாரத்தில் கூறி வருகின்றனர். எப்படியெல்லாம் சிக்கவைத்து சீரழிக்கிறது இந்த கொரோனா..!

PREV
click me!

Recommended Stories

இரவு பகல் பாராமல் எந்நேரமும் ஓயாமல் டார்ச்சர்! அதிமுக பிரமுகரின் மகளை இதற்காக தான் கொன்றேன்!
இரண்டு குழந்தைகளின் தாய் செய்ற வேலையா இது.. பழைய காதலனுக்காக புருஷனை போட்டு தள்ளிய மனைவி