இளம்பெண் டாக்டரை காதலித்து ஆசை தீர உல்லாசம்... ஆபாச வீடியோக்களை வெளியிட்டு புண்ணியம் தேடிய காசி..!

By Thiraviaraj RMFirst Published Apr 25, 2020, 1:56 PM IST
Highlights

பள்ளி சிறுமிகள் மற்றும் இளம்பெண்களை ஆபாசமாக படம், வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில்  பதிவேற்றம் செய்த இளைஞர் நாகர்கோவிலில் கைது செய்யப்பட்டுள்ளார்.

பள்ளி சிறுமிகள் மற்றும் இளம்பெண்களை ஆபாசமாக படம், வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில்  பதிவேற்றம் செய்த இளைஞர் நாகர்கோவிலில் கைது செய்யப்பட்டுள்ளார்.

கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவிலை சேர்ந்த 26 வயது இளைஞர் காசி. பெண்களுடன் நெருங்கி பழகும் புகைப்படங்கள் எடுத்த இளைஞர் காசி, அதை சமூக வலைதளத்தில் வெளியிடுவேன் என்று கூறி, பெண்களை மிரட்டி லட்சக்கணக்கில் பணம் பறித்து வந்துள்ளான். இவனால் பாதிக்கப்பட்ட பெண் மருத்துவர் ஒருவர், கோட்டார் போலீஸில் புகார்  கொடுத்தார்.   

நாகர்கோவில் கணேசபுரம் பகுதியை சேர்ந்த அவரது தந்தை கோழிக் கடை உரிமையாளர். காசி சென்னையில் உள்ள ஒரு கல்லூரியில் பி.ஏ. படித்து உள்ளார். இவர் கல்லூரியில் படித்த போது சென்னையை சேர்ந்த ஒரு பெண் டாக்டருக்கும், காசிக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் அவர்களுக்கிடையே நெருக்கமானது.

அப்போது, அந்த பெண் டாக்டரிடம் திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி அவரை பல்வேறு இடங்களுக்கு அழைத்து சென்று நெருக்கமாக இருந்துள்ளார். அப்போது அந்த காட்சிகளை அவர் செல்போன் மூலம் வீடியோவாகவும், சிலவற்றை படங்களாகவும் எடுத்துக் கொண்டார். இதற்கிடையே படிப்பு முடிந்த பிறகு காசி சொந்த ஊரான நாகர்கோவிலுக்கு திரும்பினார்.

இந்த நிலையில் பெண் டாக்டரிடம் பணம் கேட்டு காசி மிரட்டி உள்ளார். அதாவது, பணம் கொடுக்க வில்லையென்றால் உன்னுடன் நெருக்கமாக இருக்கும் படங்களை சமூக வலைதளத்தில் பரப்பி விடுவேன் என்று கூறியுள்ளார். அதோடு நின்று விடாமல், ஆபாசமாக சித்தரித்தும் வெளியிடுவேன் என மிரட்டல் விடுக்கும் வகையில் பேசியுள்ளார்.

இதனால் பயந்து போன பெண் டாக்டர், காசி கேட்ட போதெல்லாம் பணம் கொடுத்துள்ளார். ஒரு கட்டத்தில் காசியின் தொந்தரவு அதிகரிக்கவே, பெண் டாக்டர் பணம் கொடுப்பதை தவிர்த்து விட்டார். இதனால் ஆத்திரமடைந்த காசி, பெண் டாக்டரின் ஆபாச படங்கள் மற்றும் வீடியோவை, தன்னால் போலியாக உருவாக்கப்பட்ட சமூக வலைத்தளத்தில் பரப்பினார். இதனை பார்த்து பெண் டாக்டர் அதிர்ச்சி அடைந்தார். பின்னர் இதுகுறித்து கோட்டார் போலீசில் காசி மீது புகார் அளித்தார். 

போலீசார் மேற்கொண்ட விசாரணையில், தமிழகம் மட்டுமின்றி வடமாநில பெண்களையும் முகநூல் மற்றும் இன்ஸ்டாகிராம் மூலம் பழகி பணம் பறித்தது தெரியவந்துள்ளது. இதையடுத்து, கைதான இளைஞர் காசி மீது 420, 66, 67 உட்பட 9 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
 

click me!