Chennai: சென்னையில் சிகரெட் வாங்கித் தர மறுத்த இளைஞர் படுகொலை

By SG Balan  |  First Published Feb 25, 2023, 4:04 PM IST

சென்னை எண்ணூரில் சிகரெட் வாங்கித் தர மறுத்த இளைஞரை இரண்டு ரவுடிகள் படுகொலை செய்துள்ளனர்.


சிகரெட் வாங்கித் தர மறுத்த இளைஞரை இரண்டு ரவுடிகள் கத்தியால் பலமுறை குத்தி படுகொலை செய்த கொடூர சம்பவம் தங்கட்கிழமை நடந்துள்ளது.

சென்னையில் காசிமேடு பகுதியைச் சேர்ந்தவர் பிரவீன். 29 வயதான இவர் தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வந்தார். இவருக்குத் திருமணமாகி மனைவியும் குழந்தைகளும் உள்ளனர். இவர் திங்கட்கிழமை எண்ணூர் சுனாமி குடியிருப்பில் வசிக்கும் தனது தாயைப் பார்க்கச் சென்றுள்ளார்.

Tap to resize

Latest Videos

பாகிஸ்தான் அணிக்கு ஆதரவு தெரிவித்தவரை 'பாரத் மாதா கி ஜெய்' கோஷமிட வற்புறுத்திய கும்பல்

தாயைப் பார்த்துவிட்டு இரவு 10 மணி அளவில் தன் வீட்டுக்குத் திரும்பி இருக்கிறார். வரும் வழியில் ஒரு பெட்டிக்கடையில் வீட்டுக்கு பொருட்கள் வாங்கச் சென்றிருக்கிறார். அப்போது அந்தக் கடை முன்பு இருந்த முஜீப் (24), நஜீபுல்லா (25) ஆகிய இருவரும் பிரவீனிடம் தங்களுக்கு சிகரெட் வாங்கித் தருமாறு கோரியுள்ளனர்.

பிரவீன் தன்னிடம் சிகரெட் வாங்குவதற்குப் பணம் இல்லை மறுப்பு தெரிவித்திருக்கிறார். ஆனால், அதனை ஏற்காத முஜீப், நஜீபுல்லா இருவரும் அவரை மிரட்டுவதுபோல் பேசியுள்ளனர். அப்போது இருவரில் ஒருவர் பிரவீனிடம் இருந்து பணத்தைப் பறிக்க முயன்றுள்ளார். பிரவீன் தனது பணத்தை அபகறிக்க முயற்சி செய்தவரைத் தடுத்துத் தள்ளிவிட்டுருக்கிறார்.

Indore: கல்லூரி வளாகத்திலேயே முதல்வருக்கு தீ வைத்துக் கொன்ற மாணவர்!

இதனால் ஆத்திரம் அடைந்த இருவரும் பிரவீனை சட்டென்று கத்தியால் பலமுறை குத்திவிட்டு தப்பி ஓடியுள்ளனர். எதிர்பாராத நேரத்தில் நடத்த இச்சம்வத்தைக் கண்ட அப்பகுதில் இருந்த மக்கள், படுகாயங்களுடன் கிடைந்த பிரவீனை உடனடியாக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்குக் கொண்டுசென்றனர். ஆனால், வரும் வழியிலேயே அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறிவிட்டனர்.

இதுகுறித்து அளிக்கப்பட்ட புகாரின் பேரில் கொலை வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர் முஜீப், நஜீபுல்லா இருவரையும் கைது செய்துள்ளனர். விசாரணையில் இவர்கள் இருவரும் அப்பகுதியில் பலரிடம் மதுபானமும் சிகரெட்டும் வாங்கிக்கொடுக்க வற்புறுத்தி தகராறு செய்துவந்தனர் என்று தெரியவந்துள்ளது. ஏற்கெனவே கொலை முயற்சி உள்ளிட்ட பல குற்ற வழக்குகளில் இவர்கள் பெயர் இடம்பெற்றுள்ளது எனவும் காவல்துறையினர் கூறுகின்றனர்.

Juhu murder: தாயைக் கொன்று பள்ளத்தாக்கில் வீசிய மகன்! அம்பலமான அதிர்ச்சி தகவல்கள்!

click me!