காதலனுடன் சுற்றிய 16 வயது சிறுமி... தட்டிக்கேட்ட அண்ணன் மீதே பாலியல் புகார்... அடுத்து நடந்த திடீர் திருப்பம்!

Published : Sep 02, 2021, 10:51 AM IST
காதலனுடன் சுற்றிய 16 வயது சிறுமி... தட்டிக்கேட்ட அண்ணன் மீதே பாலியல் புகார்... அடுத்து நடந்த திடீர் திருப்பம்!

சுருக்கம்

16 வயது சிறுமி காதலனுடன் சுற்றியதை கண்டித்ததால் தனது அண்ணன் மீது, 2019ல் சிறுமி பாலியல் புகார் அளித்ததால், கைதாகி, இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்து வந்தார் வாலிபர். 

16 வயது சிறுமி காதலனுடன் சுற்றியதை கண்டித்ததால் தனது அண்ணன் மீது, 2019ல் சிறுமி பாலியல் புகார் அளித்ததால், கைதாகி, இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்து வந்தார் வாலிபர். அவர் மீதான புகார், உண்மை இல்லை எனத் தெரிய வந்ததால் தற்போது விடுதலையாகி இருக்கிறார். 

மும்பையை சேர்ந்த 16 வயது சிறுமி, தனது 24 வயது சகோதரன், தன்னை இரு முறை பாலியல் பலாத்காரம் செய்ததாக 2019ல் போலீசில் புகார் அளித்தார். தன்னை பலாத்காரம் செய்தது குறித்து தனது பெற்றோரிடம் கூறியும், அவர்கள் சகோதரனை கண்டிக்கவில்லை என்பதால் தானே புகாரிளிக்க வந்துள்ளதாக காவல்நிலையத்தில் புகாரளித்தார். 

இதனையடுத்து வழக்குப்பதிவு செய்த போலீசார், அவரது சகோதரனை கைது செய்து நீதிமன்ற உத்தரவின்படி சிறையில் அடைத்தனர். அவர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டதால் ஜாமின் வழங்க உயர் நீதிமன்றம் மறுத்து விட்டது. இதனையடுத்து நீதிமன்றத்தில் ஆஜரான சிறுமி, தன் சகோதரன் மீது பொய் புகார் கொடுத்ததாக வாக்குமூலம் அளித்தார். அதில், தான் காதலனுடன் வெளியே சுற்றுவதை கண்டித்த அண்ணன், காதலர் என்னை ஏமாற்றி விடுவார் என கூறி தாக்கியதால், அவருக்கு எதிராக பொய் புகார் அளித்ததாக கூறினார்.

குற்றம் சாட்டப்பட்டவருக்கு புகார்தாரர் தங்கை என்பதால், அண்ணனை காப்பாற்றுவற்காக நடந்தவற்றை மாற்றிக் கூறுவதாக, அரசு தரப்பு வழக்கறிஞர் கூறினார். இந்த வழக்கில், பாலியல் பலாத்காரத்திற்கு, சிறுமி தவிர வேறு சாட்சிகள் மற்றும் ஆதாரங்கள் ஏதுமில்லை. எனவே, வழக்கை தொடர்வது தேவையற்றது என கூறிய நீதிமன்றம், இரண்டு ஆண்டுகள் சிறையில் இருந்த அந்த சிறுமியின் அண்ணனை விடுவித்தது.

PREV
click me!

Recommended Stories

இரவு பகல் பாராமல் எந்நேரமும் ஓயாமல் டார்ச்சர்! அதிமுக பிரமுகரின் மகளை இதற்காக தான் கொன்றேன்!
இரண்டு குழந்தைகளின் தாய் செய்ற வேலையா இது.. பழைய காதலனுக்காக புருஷனை போட்டு தள்ளிய மனைவி