வீட்டில் தனியாக இருந்த மாணவியை... காமக் கொடூரனான 12ம் வகுப்பு மாணவன்..!

Published : Apr 27, 2019, 12:14 PM IST
வீட்டில் தனியாக இருந்த மாணவியை... காமக் கொடூரனான 12ம் வகுப்பு மாணவன்..!

சுருக்கம்

வீட்டில் தனியாக இருந்த 7-ம் வகுப்பு மாணவியை, 12-ம் வகுப்பு மாணவன் பாலியல் வன்கொடுமை செய்து, மின்சாரம் பாய்ச்சி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.    

வீட்டில் தனியாக இருந்த 7-ம் வகுப்பு மாணவியை, 12-ம் வகுப்பு மாணவன் பாலியல் வன்கொடுமை செய்து, மின்சாரம் பாய்ச்சி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

.  

திண்டுக்கல், வடமதுரை அருகே ஜி.குரும்பப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த வெங்கடேஷ் - லட்சுமி  தம்பதி. இவர்களது 7-ம் வகுப்பு படிக்கும் மகள், கோடை விடுமுறை காரணமாக, வீட்டில் தனியாக இருந்துள்ளார். கடந்த 16-ம் தேதி தாய் லட்சுமி வேலைக்குச் சென்றுவிட்டு வீட்டிற்கு திரும்பியபோது, மின்கம்பியை கையில் பிடித்தபடி, மாணவி சடலமாக கிடந்தார். போலீசார் சிறுமியின் உடலை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பினர். இந்த விவகாரம் தொடர்பாக, அதே கிராமத்தைச் சேர்ந்த 12-ம் வகுப்பு மாணவன் மீது சந்தேகம் ஏற்பட்டதால், போலீசார் அவனை பிடித்து விசாரித்தனர். 

அப்போது, வீட்டில் தனியாக இருந்த சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து, பின்னர் மின்சாரம் பாய்ச்சி கொலை செய்ததை மாணவன் ஒப்புக் கொண்டான். இதையடுத்து, மாணவனை கைது செய்த போலீசார், சிறுவர் சீர்த்திருத்தப் பள்ளியில் அடைத்தனர். 

PREV
click me!

Recommended Stories

ரூமில் கள்ளக்காதலனுடன் மனைவி.. பார்க்க கூடாததை பார்த்த கணவர்.. குழந்தை வாக்குமூலத்தில் வெளிவந்த பகீர் உண்மை!
இன்ஸ்பெக்டர் வீட்டில் குளித்த கல்லூரி மாணவி.. வளைச்சு வளைச்சு வீடியோ எடுத்த போலீஸ்காரர்.. இறுதியில் நடந்த ட்விஸ்ட்