“வரியா, விளையாட போலாம்..” பள்ளி மாணவனுடன் ஓட்டம் பிடித்த ஆசிரியை.. பெற்றோர்கள் அதிர்ச்சி !!

Published : Mar 14, 2022, 11:42 AM IST
“வரியா, விளையாட போலாம்..” பள்ளி மாணவனுடன் ஓட்டம் பிடித்த ஆசிரியை.. பெற்றோர்கள் அதிர்ச்சி !!

சுருக்கம்

திருச்சி மாவட்டம் துறையூர் மதுராபுரி கிராமத்தை சோ்ந்தவா் ஞானமலா்(41), இவரது 17 வயது மகன் துறையூரில் உள்ள ஸ்ரீ வித்யா மந்தீர் பள்ளியில் 11ஆம் வகுப்பு படித்து வருகிறார்.

விளையாட போறேன் :

கடந்த ஐந்தாம் தேதி வழக்கம்போல் பள்ளிக்கு சென்று அந்த மாணவர் மாலையில் வீட்டிற்கு வந்துள்ளார். வீட்டுக்கு வந்ததும், பெற்றோரிடம் தான் விளையாட செல்வதாக கூறி விட்டு உடனே வீட்டில் இருந்து வெளியில் கிளம்பினார். அதன் பின்னர் விளையாட சென்ற மாணவர் வீடு திரும்பவில்லை.

இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர்கள், மாணவனை பல்வேறு இடங்களில் தேடிப்பார்த்தும் எவ்வித தகவலும் கிடைக்கவில்லை.மாணவர் எங்கே சென்றார் என்பது குறித்து எந்த வித தகவலும் கிடைக்கவில்லை.  விளையாடவும் செல்லவில்லை என்பது அவரது நண்பர்களிடம் விசாரிக்கும் போது தெரிய வந்தது.

ஆசிரியையுடன் ஓட்டம் :

மாணவர் படித்து வந்த அதே பள்ளியில் 26 வயதுடைய மாணவருக்கு வகுப்பெடுத்த பள்ளி ஆசிரியையும் மாயமாகி இருந்தது தெரிய வந்தது. இது தொடர்பாக நேற்று மாணவரின் பெற்றோர் துறையூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து  விசாரணை நடத்தி வருகிறனர். இதனையடுத்து மாணவர் படித்த பள்ளியில் போலீசார் விசாரித்த போது, அதே நாளில் ஆசிரியையும் மாயமானது தெரிய வந்தது.

ஆனால் ஆசிரியை மாயம் தொடர்பாக இதுவரை போலீசில் யாரும் புகார் தெரிவிக்கவில்லை. துறையூர் அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த அந்த ஆசிரியை எம்ஏ பிஎட் படித்துவிட்டு கடந்த 6 ஆண்டுகளாக பணியாற்றிய தெரியவந்தது. மாணவரும் ஆசிரியரும் ஒரே நாளில் மாயமாகி உள்ளதால் இருவரும் சேர்ந்து சென்றிருக்கலாம் என கூறப்படுகிறது. இது பற்றிய தகவல்கள் சமூகவலைதளங்களில் பரவி வைரலாகி வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க : உன்னை நம்பி வீட்டுக்குள்ள விட்டதுக்கு.. என் குடும்பத்தையே இப்படி பண்ணிட்டியே.. விபரீதத்தில் முடிந்த நட்பு !

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

பள்ளி, கல்லூரி மாணவிகளை ஒரே நேரத்தில் கரெக்ட் செய்த இளைஞர்! கை குழந்தைகளுடன் 2 பேரும் கதறல்! இறுதியில் நடந்த ட்விஸ்ட்!
இதற்காக தான் கார் டிரைவர் ஹரீஷை கூலிப்படை ஏவி கொன்றேன்! மஞ்சுளாவின் சினிமாவை மிஞ்சிய பரபரப்பு வாக்குமூலம்!