
கணவனுக்கு தெரிந்துவிட்டதால் கள்ளக்காதலனின் ஆசைக்கு இணங்க மறுத்துவிட்ட இளம்பெண்ணை அடித்து துன்புறுத்திய கள்ளக்காதலன் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார்.
மனைவி கள்ளக்காதல்
தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி அடுத்த ஏலகிரியை சேர்ந்தவர் சக்திவேல்(38). சொந்தமாக லாரி வைத்து ஓட்டி வருகிறார். இவரது மனைவி சத்யா(32). இவர்களுக்கு ஒரு மகள் உள்ளார். சக்திவேல் வேலை விஷயாக அடிக்கடி வெளியூர் சென்று வந்துள்ளார். இந்நிலையில், அதே பகுதியைச் சேர்ந்த வெற்றிவேல்(25) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் இருவருக்கும் இடையே கள்ளக்காதலாக மாறியுள்ளது. சக்திவேல் இல்லாத நேரத்தில் அவரது வீட்டிற்கு சென்று அடிக்கடி உல்லாசமாக இருந்து வந்துள்ளனர்.
இதையும் படிங்க;- நான் காதலித்த பெண்ணை நீ எப்படி திருமணம் செய்யலாம்.. ஆடு வெட்டும் கத்தியால் தலையை தனியாக எடுத்த கொடூரம்.!
கணவர் கண்டிப்பு
நாளடைவில் இவர்களது கள்ளக்காதல் விவகாரம் கணவர் சக்திவேலுக்கு தெரியவந்ததையடுத்து இருவரையும் கண்டித்துள்ளார். பின்னர், வெற்றிவேல் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி கடந்தாண்டு மாவட்ட எஸ்.பி. அலுவலகத்தில் சக்திவேல் புகார் அளித்தார். இதுதொடர்பான விசாரணை தருமபுரி அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு மாற்றப்பட்டது. அங்கு முறையாக விசாரணை நடத்தாததால் சக்திவேல் தனது மனைவி சத்யாவை அடித்து துன்புறுத்துவது போன்ற வீடியோவை எடுத்து சமூகவலைதளங்களின் வெளியிட்டார். இந்த வீடியோ வைரலானதால் சக்திவேலை கடந்த 9ம் தேதி போலீஸ் கைது செய்தது.
போலீஸ் கைது
இதனிடையே, சத்யாவின் கள்ளக்காதலன் வெற்றிவேலையும் போலீசார் கைது செய்தனர். போலீசார் விசாரணையில் கணவனுக்கு தெரிந்துவிட்டதால் கள்ளக்காதல் தொடர்பை கைவிடும்படி சத்யா கூறியபோது அதற்கு ஒப்புக்கொள்ளாத வெற்றிவேல் ஆசைக்கு இணங்க மறுத்த சத்யாவை அடித்து துன்புறுத்தியது தெரியவந்தது.
இதையும் படிங்க;- முரட்டுதனமாக பாலியல் பலாத்காரம் செய்த 15 வயது சிறுவன்.. பரிதாபமாக உயிரிழந்த இளம்பெண்..!