Corona : குட் நியூஸ் மக்களே ! கொரோனா பற்றி வெளியான முக்கிய தகவல்

By Raghupati R  |  First Published Mar 12, 2022, 6:57 AM IST

Corona : தமிழ்நாட்டில் கடந்த டிச மாதம் பரவ தொடங்கிய ஓமிக்ரான் மெல்ல வேகமெடுத்தது. இதனால் மாநிலத்தில் கொரோனா 3ஆம் அலை ஏற்பட்டது.


சில நாட்களாகவே மாநிலத்தில் வைரஸ் பாதிப்பு தொடர்ந்து குறைந்தே வருகிறது. கடந்த பிப். மாதமே கிட்டதட்ட அனைத்து தளர்வுகளும் வாபஸ் பெறப்பட்டுள்ளது. கொரோனா புதிய பாதிப்பை விட அதன் பிடியில் இருந்து நாள் தோறும் மீள்பவர்கள் எண்க்கை அதிகமாக உள்ளது. இதனால் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து வருகிறது.

Latest Videos

undefined

இந்தியாவில் பாதிப்பு :

இதுவரை நாட்டில் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 4 கோடியே 29 லட்சத்து 84 ஆயிரத்து 261 ஆக உயர்ந்தது. அதேநேரம் தொற்று பாதிப்பில் இருந்து குணம் அடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 24 லட்சத்து 26 ஆயிரத்து 328 ஆக அதிகரித்துள்ளது. இதன் மூலம் குணமடைந்தோரின் சதவீதம் 98.70 ஆக உயர்ந்துள்ளது.

தற்போது கொரோனா பாதிப்புடன் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 42,219 ஆக சரிந்துள்ளது. இது நேற்று முன் தினத்தை விட 2,269 குறைவு ஆகும். கொரோனா பாதிப்பால் மேலும் 255 பேர் இறந்துள்ளனர். இதில் கேரளாவில் விடுபட்ட மரணங்கள் உள்பட 227 பேர் அடங்குவர். இதனால் மொத்த பலி எண்ணிக்கை 5,15,714 ஆக உயர்ந்துள்ளது.

நாடு முழுவதும் 179.72 கோடி டோஸ் தடுப்பூசிகள் மக்களுக்கு செலுத்தப்பட்டுள்ளது. இதில் நேற்று போடப்பட்ட 16,73,515 டோஸ்கள் அடங்கும்.இதற்கிடையே நேற்று 8,12,365 மாதிரிகளும், இதுவரை 77.68 கோடி மாதிரிகளும் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் பாதிப்பு :

கொரோனா பாசிட்டிவ் விகிதம் 0.3%ஆக குறைந்துள்ளது. குறிப்பாகச் சென்னையில் பாசிட்டிவ் விகிதமும் தொடர்ந்து குறைந்தே வருகிறது. ஒரு கட்டத்தில் 30% வரை சென்ற பாசிட்டிவ் விகிதம் இப்போது 0.7ஆக குறைந்துள்ளது. தமிழகத்தில் எந்தவொரு மாநிலத்திலும் கொரோனா பாசிட்டிவ் விகிதம் 1ஐ தாண்டவில்லை.

தமிழகத்தில் கடந்த சில வாரங்களாகவே 10க்கும் குறைவாகவே கொரோனா உயிரிழப்புகள் இருந்து வந்தது.  இந்நிலையில், மார்ச் 11ஆம் தேதி மாநிலத்தில் கொரோனாவால் யாரும் உயிரிழக்கவில்லை, தமிழகத்தில் கடந்த 2020-ஆம் ஆண்டு ஏப்ரல் 30இல் கொரோனாவால் ஒருவர் கூட உயிரிழக்கவில்லை.

click me!