TN Corona: தமிழகத்தில் குறைந்து வரும் கொரோனா… கடந்த 24 மணி நேரத்தில் உயிரிழப்பு இல்லை!!

By Narendran S  |  First Published Mar 11, 2022, 8:15 PM IST

தமிழகத்தில் ஒருநாள் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 200க்கும் கீழ் குறைந்துள்ளது. அந்த வகையில் தமிழ்நாட்டில் இன்று ஒரே நாளில் 112 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 


தமிழகத்தில் ஒருநாள் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 200க்கும் கீழ் குறைந்துள்ளது. அந்த வகையில் தமிழ்நாட்டில் இன்று ஒரே நாளில் 112 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று ஒரு நாள் பாதிப்பு 1291 ஆக இருந்த நிலையில் இன்றைய கொரோனா உறுதியானவர்களின் எண்ணிக்கை 112 ஆக குறைந்துள்ளது. 42,241 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்ட நிலையில் ஒருநாள் கொரோனா பாதிப்பு 112 ஆக உள்ளது. சென்னையில் மட்டும் 42 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.


சென்னையில் ஏற்கனவே 44 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் இன்று கொரோனா எண்ணிக்கை 42 ஆக குறைந்துள்ளது. தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் உயிரிழப்பு ஏதும் பதிவாகவில்லை. கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 1,461 ஆக உள்ளது. கொரோனா தொற்றிலிருந்து மேலும் 327 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதன் மூலம் குணமடைந்தோர் எண்ணிக்கை 34,11,899 ஆக உள்ளது. 

Tap to resize

Latest Videos


சென்னைக்கு அடுத்தபடியாக அரியலூர் 0, செங்கல்பட்டு 12, சென்னை 42, கோயம்புத்தூர் 13, கடலூர் 1, தர்மபுரி 4, திண்டுக்கல் 0, ஈரோடு 4, கள்ளக்குறிச்சி 0, காஞ்சிபுரம் 4, கன்னியாகுமரி 0, கரூர் 0, கிருஷ்ணகிரி 4, மதுரை 0, மயிலாடுதுறை 0, நாகப்பட்டிணம் 0, நாமக்கல் 2, நீலகிரி 5, பெரம்பலூர் 0, புதுகோட்டை 0, ராமநாதபுரம் 1, ராணிப்பேட்டை 0, சேலம் 1, சிவகங்கை 0, தென்காசி 1, தஞ்சாவூர் 1, தேனி 0, திருப்பத்தூர் 0, திருவள்ளூர் 3, திருவண்ணாமலை 1, திருவாரூர் 1, தூத்துக்குடி 0, திருநெல்வேலி 3, திருப்பூர் 2, திருச்சி 1, வேலூர் 4, விழுப்புரம் 0, விருதுநகர் 2 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

click me!