Corona: சென்னை, செங்கல்பட்டியில் எகிறி அடிக்கும் கொரோனா..ஒரே நாளில் 17,934 பேருக்கு கொரோனா..

By Thanalakshmi V  |  First Published Jan 12, 2022, 8:51 PM IST

தமிழ்நாட்டில் இன்று  ஒரே நாளில் 17,934 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 
 


தமிழ்நாட்டில் இன்று  ஒரே நாளில் 17,934பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று ஒரு நாள் பாதிப்பு 15,379 ஆக இருந்த நிலையில் இன்றைய கொரோனா உறுதியானவர்களின் எண்ணிக்கை 2,555 அதிகரித்து 17,934 ஆக பதிவாகியுள்ளது. 1,56,281 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்ட நிலையில் ஒருநாள் கொரோனா பாதிப்பு 17,934 ஆக உள்ளது. ஜனவரி 1 ஆம் தேதி 1,489 ஆக இருந்த ஒருநாள் கொரோனா பாதிப்பு தற்போது 17,934 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் மட்டும்  7,372 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஜனவரி 1 ஆம் தேதி 682 ஆக இருந்த ஒருநாள் கொரோனா பாதிப்பு தற்போது 7,372 ஆக அதிகரித்துள்ளது. நேற்று ஒரு நாள் பாதிப்பு 6,484ஆக இருந்த நிலையில், இன்று மேலும் கொரோனா எண்ணிக்கை அதிகரித்துள்ளது. ஒருநாள் கொரோனா பாதிப்பு 6,484   ஆக இருந்த நிலையில் 888 அதிகரித்து ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் 17,898 பேர், வெளி நாடு மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து வந்த 36 பேர் என 17,934 பேருக்கு இன்று கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 19 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனாவால் இன்று ஒரு நாள் மட்டும் 19 பேர் உயிரிழந்த நிலையில் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 36,905 ஆக உள்ளது. அரசு மருத்துவமனையில் 12 பேரும் தனியார் மருத்துவமனையில் 7 பேரும் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் கொரோனா சிகிச்சையில் இருப்போர் எண்ணிக்கை 88,959 ஆக உயர்ந்துள்ளது. மேலும் கொரோனா தொற்றிலிருந்து 4,039 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதன் மூலம் குணமடைந்தோர் எண்ணிக்கை 27,21,725 ஆக அதிகரித்துள்ளது.

Tap to resize

Latest Videos

சென்னைக்கு அடுத்தபடியாக செங்கல்பட்டில் 1,696  ஆக இருந்த ஒருநாள் கொரோனா பாதிப்பு தற்போது 1840 ஆக அதிகரித்துள்ளது. கோவையில் இன்று ஒரே நாளில் 981 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. திருவள்ளூரில் 893 ஆக இருந்த ஒருநாள் கொரோனா பாதிப்பு தற்போது ஆக 931 அதிகரித்துள்ளது. காஞ்சிபுரத்தில் 580  ஆக இருந்த கொரோனா பாதிப்பு தற்போது 620 ஆக அதிகரித்துள்ளது.மதுரையில்  512ஆக இருந்த கொரோனா பாதிப்பு 498 தற்போது ஆக குறைந்துள்ளது. நெல்லை 479 ஆக இருந்த கொரோனா பாதிப்பு 451 ஆக குறைந்துள்ளது. அதே போல் திருச்சி 444, கன்னியாகுமரி 388, ராணிப்பேட்டை 373, விருதுநகர் 311, வேலூரில் 292 பேருக்கும், ,தூத்துக்குடி 289, சேலம் 285,  கடலூர் 206 , திருப்பூர் 205 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் தமிழக மாநிலத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் கொரோனா தொற்று பதிவாகியுள்ளது. 

click me!