Corona India: 2 ஆண்டுகளுக்கு பிறகு குறைந்த பாதிப்பு..ஒரு நாள் கொரோனா பாதிப்பு 2,503..

By Thanalakshmi V  |  First Published Mar 14, 2022, 3:55 PM IST

Corona India: இந்தியாவில் ஒரு நாள் கொரோனா பாதிப்பு கடந்த 2020 ஆண்டுக்கு பிறகு, மிக குறைந்தளவில் இன்று பதிவாகியுள்ளது.


கொரோனா தொற்று காரணமாக கடந்த 2 ஆண்டுகளில் நாடு ஸ்தம்பித்து போனது. குறிப்பாக கொரோனா முதல் அலை, இரண்டாம் அலை ஏற்படுத்திய தாக்கம் மிக கொடுமையானது. எண்ணற்ற உயிரிழப்புகள், வேலை இழப்புகள், மாணவர்களின் கல்வி பாதிப்பு, தொழிற்சாலைகள் மூடல், சிறு குறு வணிக நிறுவனங்கள் நிரந்தரமாக மூடல் என அனைத்து தட்டு மக்களுக்கும் அதிகபட்ச பாதிப்பினை இந்த கொரோனா பெருந்தொற்று ஏற்படுத்தியிருந்தது. 

மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பின்படி, கடந்த 24 மணி நேரத்தில் நாடு முழுவதும் புதிதாக 2,503 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று பாதித்துள்ளது. இதன் மூலம் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 4,29,93,494 ஆக உள்ளது. தமிழகத்தில் நேற்று ஒரு நாள் கொரோனா பாதிப்பால் 95 பேர் மட்டுமே பாதிக்கப்பட்டுள்ளனர். 

Tap to resize

Latest Videos

undefined

மேலும் படிக்க: Corona TN: கொரோனா 4 வது அலை வருமா..? வராதா..? சுகாதாரத்துறை அமைச்சர் நச் பதில்..

கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 27 பேர் உயிரிழந்த நிலையில் மொத்த கொரோனா உயிரிழப்பு 5,15,877 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவிலிருந்து குணமடைவோர் சதவீதம் 98.72% ஆக அதிகரித்துள்ளது. இதனால் இதுவரை குணமடைந்தோர் எண்ணிக்கை 4,24,41,449 என்றளவில் உள்ளது. அன்றாட கொரோனா பரவல் விகிதம் 0.47% ஆக உள்ளது. வாராந்திர கொரோனா பரவல் விகிதம் 0.47 என்ற சதவீதத்திலேயே உள்ளது.

இந்தியாவில் கடந்த 2021 ஜனவரி 16-ம் தேதி முதல் பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இந்நிலையில் கடந்த ஜனவரி மாதம் முதல் நாடு முழுவதும் 15 - 18 வயதோருக்கான தடுப்பூசி அறிமுகம் செய்யப்பட்டு, தடுப்பூசி செலுத்தப்படுகிறது. இந்நிலையில், கடந்த 24 மணி நேர நிலவரப்படி நாடு முழுவதும் 180.19 கோடி டோஸ்கள் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

click me!