Corona TN: கொரோனா 4 வது அலை வருமா..? வராதா..? சுகாதாரத்துறை அமைச்சர் நச் பதில்..

By Thanalakshmi V  |  First Published Mar 13, 2022, 10:07 PM IST

Corona TN: கொரோனா அடுத்த அலை வருமா இல்லையா என்பது குறித்து முன்கூட்டியே தெரிவிக்க இயலாது என்று தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்துள்ளார்.
 


கொரோனா தொற்று காரணமாக கடந்த 2 ஆண்டுகளில் நாடு ஸ்தம்பித்து போனது. குறிப்பாக கொரோனா முதல் அலை, இரண்டாம் அலைகள் ஏறடுத்திய தாக்கம் மிக கொடுமையானது. எண்ணற்ற உயிரிழப்புகள், வேலை இழப்புகள், மாணவர்களின் கல்வி பாதிப்பு, தொழிற்சாலைகள் மூடல், சிறு குறு வணிக நிறுவனங்கள் நிரந்தரமாக மூடல் என அனைத்து தட்டு மக்களுக்கும் அதிகபட்ச பாதிப்பினை இந்த கொரோனா பெருந்தொற்று ஏற்படுத்தியிருந்தது. 

Tap to resize

Latest Videos

undefined

இரண்டாம் அலையில் கொரோனா நோய் தொற்றினால் கொத்து கொத்தாக இறந்த மக்களை புதைக்க இடமில்லாமல் திணறி நிலை மீண்டும் வர கூடாது என்பதே அனைவரது வேண்டுதலாக இருக்கிறது. இந்நிலையில் கொரோனா எதிரான தடுப்பூசியை மத்திய அரசு அறிமுகப்படுத்தி, முன்கள பணியாளர்கள், 60 வயதுக்கு மேற்பட்டவர் முதலில் போடப்பட்டது. பின்னர் 18 வயதிற்கு மேற்பட்ட அனைத்து மக்களுக்கும் என்று விரிவுப்படுத்தப்பட்டது. இந்தியாவில் கோவக்சின், கோவிஷீல்ட் உள்ளிட்ட தடுப்பூசிகள் போடப்படுகின்றன.

மேலும்  படிக்க: TN Corona: கொரோனா இன்னும் குறையல..மக்கள் அலர்டா இருங்க.. அமைச்சர் மா.சு விளக்கம்

இந்தாண்டு கடந்த ஜனவரி மாதம் தான் 15 - 18 வயது உட்பட்டவர்களுக்கு கோவக்சின் தடுப்பூசி மட்டும் போடலாம் என்று மத்திய அரசு அறிவித்தது. அதன் படி, நாடு முழுவதும் 15 - 18  வயதோருக்கான தடுப்பூசி செலுத்தும் திட்டம் விரிவுப்படுத்தப்பட்டு வருகிறது. இதன் விளைவாக, பொதுமக்களுக்கு போர்க்கால அடிப்படையில் தடுப்பூசி செலுத்தப்பட்டு மூன்றாவது அலையில் கொ ரோனா பாதிப்புகள் கட்டுக்குள் வைக்கப்பட்டது. 

முந்தைய அலைகளை ஒப்பிடும் போது, மூன்றாம் அலை குறைந்த அளவிலான பாதிப்பை ஏற்படுத்தியது. மேலும் கொரோனா வைரஸ் இருந்து உருமாற்றம் அடைந்த ஒமைக்ரான் வைரஸ் , வேகமாக பரவினாலும் விரைவில் குணமடையும் வகையிலே இருந்தது. இந்நிலையில் தமிழ்நாட்டில் ஒருநாள் கொரோனா பாதிப்பு 100க்கும் கீழ் குறைந்துள்ளது. இன்று ஒரே நாளில் 95 பேருக்கு மட்டுமே தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று பாதிப்பு 105 ஆக இருந்த நிலையில் இன்றைய கொரோனா உறுதியானவர்களின் எண்ணிக்கை 95 ஆக குறைந்துள்ளது. 2020 மார்ச் 30 ஆம் தேதிக்கு பிறகு தற்போது 100க்கும் கீழே கொரோனா தொற்று பதிவாகியுள்ளது. 

மேலும் படிக்க: தமிழகத்தில் 100க்கும் கீழ் குறைந்த கொரோனா… 3வது நாளாக பலி எண்ணிக்கை இல்லை!!

இந்திய அளவிலும் தற்போது தினசரி கொரோனா பாதிப்பு என்பது குறைந்த எண்ணிக்கையில் பதிவாகி வரும் சூழலில் தற்போது கொரோனா குறித்த புதிய தகவல் ஒன்று அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதன்படி தற்போது பாதிப்பு எண்ணிக்கை குறைவாக இருந்தாலும், இன்னும் மூன்று அல்லது நான்கு மாதங்களில் அதாவது ஜூன், ஜூலை மாதங்களில் கொரோனா நான்காவது அலை ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளதாக இந்திய கொரோனா நிபுணர் குழு தலைவர் இக்பால் தெரிவித்திருந்தார்.

 இதற்கிடையே ஜூன் மாதம் இறுதியில் கொரோனா 4 வது அலை ஏற்படும் என்று கான்பூர் ஐஐடி தெரிவித்துள்ளது. கொரோனா அடுத்த அலை பற்றிய கேள்விக்கு பதிலளித்து பேசிய சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பரமணியன், "கொரோனா அடுத்த அலை வருமா இல்லையா என்று யாரும் முன்கூட்டியே கணிக்க இயலாது. திருமணத்துக்கு நாள் குறிப்பது போல கான்பூர் ஐஐடி கொரோனா நான்காவது அலை இப்போ வரும், அப்போ வரும் என்று தொடர்ந்து கூறி வருகிறது" என்றார். 

click me!