சீனாவில் மீண்டும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதால் உலக நாடுகள் அச்சத்தில் ஆழ்த்துள்ளனர்.
சீனாவில் மீண்டும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதால் உலக நாடுகள் அச்சத்தில் ஆழ்த்துள்ளனர். சீனாவில் முதலில் கண்டறியப்பட்ட கொரோனா பாதிப்பு உலக நாடுகள் முழுவதும் வேகமாக பரவியது. இதை அடுத்து அனைத்து நாடுகளும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டதை அடுத்து கொரோனா கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. இதனிடையே சீனாவில் அண்மை காலங்களாக கொரோனா வைரஸ் பாதிப்பு குறைந்து வந்தது. இந்த நிலையில், தற்போது கொரோனா வைரஸ் பாதிப்பு மீண்டும் அதிகரித்துள்ளதால் சீனாவில் செய்வதறியாது தடுமாறி வருகிறது. இதுவரை கொரோனா வைரசை எந்தவொரு நாடும் முழுமையாக அழிக்கவில்லை. பல்வேறு நாடுகளும் கொரோனா வைரஸுடன் இணைந்து வாழ பழகிக் கொள்ள வேண்டும் என்ற நிலைப்பாட்டை எடுத்துவிட்டது. இந்த நிலையில் சீனாவில் கடந்த 2 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு தினசரி தொற்று பாதிப்பு அதிகரித்து வருவதால், சில நகரங்களில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
undefined
சீனாவில் கடந்த இரண்டாண்டுகளில் இல்லாத அளவுக்கு தினசரி கொரோனா தொற்று பரவல் அதிகரிக்க தொடங்கியுள்ளது. இதுவரை 3,393 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்றைய தினசரி பாதிப்பில் ஜிலினில் 1,412 பேர், ஷான்டாங்கில் 175 பேர், குவாங்டாங்கில் 62 பேர், ஷான்சியில் 39 பேர், ஹெபேயில் 33 பேர், ஜியாங்சுவில் 23 பேர், தியான்ஜினில் 17 பேர் என ஒரே நாளில் 1,807 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த பாதிப்பு நேற்றையவிட மூன்று மடங்கு அதிகம். கடந்த 2020 ஆம் ஆண்டு பிப்ரவரி பதிவான கொரோனா பாதிப்பை காட்டிலும் தற்போது தினசரி பாதிப்பு அதிகரித்து வருகிறது. வடகிழக்கு சீனாவின் சேங்சுன் என்ற பகுதியில் 90 லட்சம் மக்கள் வசிக்கின்றனர். தொற்று பரவலால் அங்கு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதுவரை ஆறு கட்டங்களாக பெரிய அளவில் கொரோனா தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இன்று மட்டும் 500 பேருக்கும் அதிகமானோருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. சீனாவின் 19 நகரங்களில் கொரோனா தொற்று பரவல் அதிகமாக இருப்பதாக அந்நாட்டின் சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
சாங்காய் மற்றும் தொற்று பரவல் அதிகம் உள்ள பகுதிகளில் பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. அங்கும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. ஷான்சென் மாகாணத்தின் ஒன்பது மாவட்டங்களில் செயல்படும் உணவகங்கள், பொழுதுபோக்கு இடங்கள் மூடப்பட்டன. மார்ச் 14 முதல் 18ம் தேதி வரை ஊழியர்கள் வீட்டிலிருந்து வேலை செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது. கொரோனா தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டில் அலட்சியம் காட்டியதாக தெற்கு நகரமான டோங்குவானின் ஆறு அதிகாரிகள் பணியில் இருந்து நீக்கப்பட்டனர். மார்ச் 12 ஆம் தேதி நிலவரப்படி, சீனாவில் உறுதிப்படுத்தப்பட்ட தொற்று பாதிப்பு எண்ணிக்கை 1 லட்சத்து 15 ஆயிரத்து 466 ஆக உள்ளது. சீனாவில் ஒமைக்ரான் மற்றும் டெல்டா வகை கொரோனா தொற்றின் பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக அந்நாட்டு சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. சீனாவில் மீண்டும் கொரோனா வேகமாக பரவி வருவதால் உலக மக்கள் அச்சமடைந்துள்ளனர்.