அதிகரிக்கும் கொரோனா உயிரிழப்புகள்.. இந்தியாவை மீண்டும் அச்சுறுத்தும் கொரோனா.. அச்சச்சோ ?

By Raghupati RFirst Published May 8, 2022, 10:22 AM IST
Highlights

India Corona : இந்தியாவில் தொடர்ந்து பல வாரங்களாக கொரோனா பாதிப்பு குறைந்து வந்த நிலையில், கடந்த ஒரு வாரமாக நோய்த்தொற்று எண்ணிக்கை அதிகரித்து காணப்படுகிறது.

கடந்த 15 நாளாக கொரோனா பாதிப்பு எண்ணிக்கை மீண்டும் அதிகரித்துள்ளது. டெல்லி, ஹரியானா மற்றும் உத்தரபிரதேம் உள்ளிட்ட மாநிலங்களில் கொரோனா பாதிப்பானது அதிகரித்து வரும் நிலையில் முகக் கவசம் உள்ளிட்ட கட்டுப்பாடுகள் மீண்டும் அதிகரிக்கப்பட்டுள்ளன. இந்தியாவில் நேற்று தினசரி கொரோனா பாதிப்பு நாளில் 3,805 ஆக இருந்த நிலையில் கடந்த ஒரே நாளில் 3,451 ஆக குறைந்துள்ளது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதனால் நாட்டில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 4,31,02,194 ஆக பதிவாகியுள்ளது. கொரோனா இறப்பு எண்ணிக்கை நேற்று 22 ஆக இருந்த நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் 40 ஆக அதிகரித்துள்ளது.இதுவரை மொத்த பலியானவர்களின் எண்ணிக்கை 5,24,064 ஆக பதிவாகியுள்ளது. கடந்த ஒரே நாளில் 3,079 பேர் கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்து உள்ளனர்.மேலும்,இந்தியாவில் இதுவரை குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 4,25,57,495 ஆக அதிகரித்துள்ளது.

இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு 20,635 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். நாட்டில் இதுவரை 1,90,20,07,487 டோஸ் கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது என்றும் இந்தியாவில் ஒரே நாளில் 17,39,403 கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது எனவும் மத்திய சுகாதார அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க : குழந்தைகளை தாக்கும் “தக்காளி காய்ச்சல்” 85 குழந்தைகள் பாதிப்பு.. கேரளாவில் பீதியை கிளப்பும் வைரஸ்!

இதையும் படிங்க : Asani: இன்று உருவாகிறது அசானி புயல்.. தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு - எந்தெந்த மாவட்டங்கள் தெரியுமா ?

click me!