செங்கல்பட்டு மருத்துவக்கல்லூரியில் கொரோனா தொற்று... 72 பேருக்கு பாதிப்பு!!

By Narendran S  |  First Published May 7, 2022, 5:20 PM IST

செங்கல்பட்டு மாவட்டம் அம்மாபேட்டை அருகே தனியாருக்கு சொந்தமான சத்யசாய் எனும் மருத்துவக் கல்லூரியில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 72 ஆக உயர்ந்துள்ளது. 


செங்கல்பட்டு மாவட்டம் அம்மாபேட்டை அருகே தனியாருக்கு சொந்தமான சத்யசாய் எனும் மருத்துவக் கல்லூரியில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 72 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்தும் குறைந்தும் காணப்படுகிறது. நேற்று பாதிப்பு சற்று உயர்ந்துள்ளது. தமிழத்தில் நேற்று தினசரி கொரோனா பாதிப்பு 58 ஆக பதிவாகியிருந்தது. தமிழகத்தில் நேற்று முன் தினம் 58 ஆக இருந்த கொரோனா பாதிப்பு நேற்று புதிதாக 64 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை தொற்று பாதித்தவர்கள் எண்ணிக்கை 34 லட்சத்து 54 ஆயிரத்து 217 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவில் இருந்து மேலும் 56 பேர் குணம் அடைந்துள்ளனர். சென்னையில் 34 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் செங்கல்பட்டு தனியார் மருத்துவக் கல்லூரியில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 72 ஆக உயர்ந்துள்ளது.

Tap to resize

Latest Videos

undefined

செங்கல்பட்டு மாவட்டம் அம்மாபேட்டை அருகே, தனியாருக்கு சொந்தமான சத்யசாய் எனும் மருத்துவக் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரியில் முதலாம் ஆண்டு வகுப்புகள் தொடங்கிய நிலையில், மாணவர்களுக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. அப்போது சில மாணவர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதை அடுத்து கடந்த 4 நாள்களில் மொத்தம் 972 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இந்த நிலையில் இன்று மேலும் 42 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதை அடுத்து கல்லூயில் இதுவரை 72 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

தொடர்ந்து, அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. லேசான அறிகுறிகள் மட்டுமே உள்ள மாணவர்களும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். தொடர்ந்து, அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களுக்கும் பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. கொரோனா பாதிப்பு எண்ணிக்கை உயர்ந்து வருவதை அடுத்து பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. முன்னதாக, சென்னை ஐஐடியில் 200க்கும் அதிகமான மாணவர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியானது. இதை அடுத்து கொரோனா வைரஸ் பாதிப்புக்குள்ளான மாணவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. 

click me!